பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

பிரதாப முதலியார் சரித்திரம்

பட்டவர்களுடைய முகத்தில் விழிக்காமல், ஞானம்பாளையும் அழைத்துக்கொண்டு எங்கேயாவது போய்விடலாமென்கிற எண்ணம் உண்டாயிற்று. ஆனால் ஞானாம்பாள் வியாதியாயிருப்பதினாலே, அவளை அழைத்துக் கொண்டு போவது தகுதியல்லவென்றும் நான் முந்திப் போய் ஒரு இடத்தில் நிலைத்திருந்துகொண்டு பிற்பாடு அவளை அழைத்துக்கொள்ளலாமென்றும் எனக்குள்ளே தீர்மானித்துக் கொண்டேன். ஆனால் அவளுக்குத் தெரிவிக்காமற் போனால் அவளுடைய வியாதி அதிகரிக்குமென்று பயந்து சகல விவரங்களையும் ஒரு அந்தரங்கக் கடிதம் மூலமாக அவளுக்குத் தெரிவித்தேன். அதற்கு உடனே மறுமொழி அனுப்பினாள். அதில் நான் தேசாந்தரம் போகக் கூடாதென்றும் , சில விசை நான் தேசாந்தரம் போகிற பக்ஷத்தில் தன்னையும் அழைத்துக்கொண்டு போகவேணுமென்றும் எழுதியிருந்தாள். நான் அவளை அழைத்துக்கொண்டு போவதற்குள்ள அசந்தர்ப்பங்களை விவரித்து இரண்டாவது கடிதம் அனுப்பினேன். அதற்கு ஒரு பதிலும் வராதபடியால் நான் சொன்ன நியாயங்களை அவள் ஏற்றுக்கொண்டாளென்று ஊகித்துக் கொண்டேன். அவளுக்கு நான் புறப்படப் போகிற தினத்தையும் தெரிவிக்கவில்லை.




23-ஆம் அதிகாரம்
பிரதாப முதலியார் பிரயாணம்—பிரிந்தவர்
கூடல்—இரண்டு தாரக்காரன் பட்டபாடு

அத்தியாயம் - 23 ஒருநாள் இராத்திரி எல்லாரும் தூங்குகிற சமயத்தில் எனக்கு விசுவாசமுள்ள இரண்டு வேலைக்காரர்களை-