பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாஸ்திக ஒழுக்கம்‌

189

பேசத் தகுந்த மனுஷர்கள் அகப்படாமையினாலும் இங்கிலீஷ் துரைமார்களுடைய சல்லாபம் அவனுக்குக் கிடைப்பது அரிதாகையாலும் அவர்களுடைய பரிசாரகர்கள் சுயம்பாகிகள் எளிய சட்டைக்காரர்கள் முதலானவர்களுடைய சகவாசமே அவனுக்கு நிலைத்துவிட்டது. அவர்களில் சிலர் தினந்தோறும் பல் விளக்காமையினால் இவனும் பல் விளக்குகிற வழக்கத்தை விட்டுவிட்டான். அவர்கள் ஸ்நானஞ் செய்யாமையினால் இவனும் ஸ்நானத்தை விட்டுவிட்டான். அவர்கள் சுருட்டுக் குடிக்கிறது வாயில் புகையிலை போட்டுக்கொள்ளுகிறது கள்ளு சாராயம் அருந்துகிறது முதலான வழக்கங்களை அநுசரிப்பதால் இவனும் அந்தத் துர்வழக்கங்களை ஆசரிக்கத் தொடங்கினான். அவர்களிடத்தில் துர்ப்பாஷைகளையும் கற்றுக் கொண்டான். அவர்களுடைய ஸ்திரீகள் அந்நிய புருஷர்களிடத்தில் சங்கோசம் இல்லாமல் சம்பாஷிப்பது சகஜமானபடியால் அந்த வழக்கத்தை இவனுடைய பத்தினி முதலான ஸ்திரீகளுக்குத் தானே பிரயாசப்பட்டுக் கற்பித்தான். தன்னுடைய இஷ்டர்கள் சந்திக்க வரும்போது தன்னுடைய பத்தினியைக் கூட வைத்துக் கொண்டு பேட்டி கொடுப்பதும் தான் யாரையாவது காணப் போகும்பொழுது ஸ்திரீ சகிதமாய்ப் போய்க் காணுகிறதும் அவனுடைய வழக்கம். அந்த வழக்கத்தை நிறுத்தவேண்டுமென்று அவனுடைய பத்தினி முதலானவர்கள் பிரயாசைப்பட்டும் அவர்களுடைய ஜபம் நடக்கவில்லை.

இங்கிலீஷில் சன்மார்க்கமான புஸ்தகங்கள் எத்தனையோ இருந்தாலும் அவைகளை அனந்தையன் வாங்குகிறதும் இல்லை. படிக்கிறதும் இல்லை. லெக்கி எல் (Lucky.L), ஸ்டீபன் (Stephen), பெயின் (Bain), டார்வின் (Darwin), கமெடி எஸ் (Comete S), மில் (Mill), ஹெர்பர்ட் (Herbert), ஸ்பென்சர் (Spencer), ஹக்ஸ்லி (Huxley), ஹூம் (Hume), காலின்ஸ் (Collins), டிண்டால் (Tyndal), வால்டேர் (Voltaire) முதலான வேத