பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தம்பதிகள்‌ உரையாடல்‌

273

சொல்லி யனுப்பினேன்“” என்றாள். இந்த வரலாற்றை யெல்லாங் கேட்ட உடனே, எனக்கு உண்டான ஆச்சரியம் அளவுகடந்து போய் விட்டது.



38-ஆம் அதிகாரம்
அரசன் குடிகளுக்குச் செய்ய வேண்டிய
நன்மைகள்—உத்தியோக விஷயம்—
பரிதான கண்டனம்

நானும் ஞானாம்பாளும் எங்களுடைய துயரங்களை ஒருவருக்கொருவர் சொல்லி மனந்தேறின பிறகு, ஞானாம்பாள் என்னை நோக்கி ““நீங்கள் உங்களுடைய வரலாறுகளை எனக்குத் தெரிவித்த போது, ஒரு முக்கியமான சங்கதியைத் தெரிவிக்காமல் விட்டுவிட்டீர்கள். நீங்கள் பொழுது விடியாமல் பாடினதாகவும், அந்தப் பிரகாரம் பொழுது விடியாமலிருந்ததாகவும், பிறகு நீங்கள் வேறொரு பாட்டுப் பாடி பொழுது விடியும்படி செய்ததாகவும் நான் கேள்விப்பட்டேன். அந்தச் சங்கதியை எனக்கு விவரமாகத் தெரிவிக்க வேண்டும்“” என்று சொல்லிக் கும்பிட்டாள். சக்கிலியன் பக்ஷமாக நியாயாதிபதி தீர்மானஞ் செய்ததும், நான் கிரகணத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு பொழுது விடியாமற் பாடினதும், பிறகு ஜனங்களுடைய வேண்டுகோளின் பிரகாரம் நான் பொழுது விடியும்படி பாடினதும் ஞானாம்பாளுக்குப் பூரணமாகத் தெரிவித்தேன். அதைக் கேட்ட வுடனே, அவள் நெடுநேரம் வரைக்கும் குலுங்கக் குலுங்கச் சிரித்தாள். பிறகு அவள் என்னுடைய

18