பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியற்‌ சீர்திருத்தங்கள்‌

287

காத வழி தூரத்துக்கு அப்பால் ஒவ்வொரு கச்சேரியிருந்தபடியால் ஜனங்கள் அவ்வளவு தூரம் போய் நியாயம் பெற்றுக்கொள்வது பிரயாசமா யிருந்தது. நாங்கள் சமீபமான இடங்களில் கச்சேரிகளை ஸ்தாபித்து ஜனக்களுக்குச் சகாயஞ் செய்தோம். உத்தியோக வரிசையில் ஒழுங்கீனமாய்க் கீழ்ப்படியிலிருக்க வேண்டியவர்கள் மேற்படியிலும், மேற்படியிலிருக்க வேண்டியவர்கள் கீழ்ப்படியிலும் வைக்கப் பட்டிருந்தார்கள். நாங்கள் அந்த ஏற்பாட்டைத் தலைகீழாக மாற்றி அவரவர்களுடைய யோக்கியதைக்குத் தகுந்த ஸ்தானங்களில் நியமித்தோம். அதிக வேலையுள்ள உத்தியோகஸ்தர்களுக்குக் குறைந்த சம்பளமும், குறைந்த வேலையுள்ளவர்களுக்கு அதிக சம்பளமும் நிஷ்கரிஷிக்கப்பட்டிருந்தன. நாங்கள் அந்த அக்கிரமத்தையும் திருத்திச் சரிப்படுத்தினோம். சில உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு வேலயுமில்லாமலிருக்க, அவர்களுக்கு வகைதொகை யில்லாமல் ஏராளமாய்ச் சம்பளங்கள் ஏற்றப்பட்டிருந்தன. நாங்கள் அந்த உத்தியோகங்கள் அநாவசியமென்று அடியோடே மர்த்தனஞ் செய்துவிட்டோம்.

ஜனங்களுடைய நன்மைக்கு விரோதமாக உத்தியோகஸ்தர்களுக்கு அபரிமிதமான சம்பளங்களை ஏற்படுத்தி அந்தச் சம்பளங்களைக் கொடுப்பதற்காகவே, நிலவரி வீட்டுவரி முதலிய நியாயமான வரிகளைத் தவிரக் காற்றுவரி, மழைவரி, தீபவரி, கால்நடைவரி, மார்க்கவரி, கல்யாணவரி, துக்கவரி, ஜனனவரி, மரணவரி, மலஜலவரி முதலிய அநியாயவரிகளை ஏற்படுத்தியிருந்தார்கள். நாங்கள் நிலவரி வீட்டுவரி முதலிய நியாயமான வரிகளை வைத்துக்கொண்டு மற்ற வரிகளையெல்லாம் நீக்கிவிட்டோம்.

சில தேசங்களில் வியாஜ்ஜியங்களுக்கு முத்திரைவரி ஏற்பட்டிருப்பது போல விக்கிரமபுரியில் வியாஜ்ஜியங் கொண்டுவருகிற ஒவ்வொருவரும், வியாஜியக்