பக்கம்:பிரதாப முதலியார் சரித்திரம்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

345

பிரதாப முதலியார் சரித்திரம்

மானதால் ஊரிலே திருட்டுகளும் புரட்டுகளும் கொள்ளைகளும் கொலைகளும் அதிகரிக்கும். இதுதான் சமயமென்று அந்நிய தேசத்து சத்ருக்களும் பிரவேசித்துச் சர்வ கொள்ளையடிப்பார்கள். ஒரு ராஜா இறந்தவுடனே அவனுடைய சந்ததி ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் அந்தச் சந்ததிக்கே பட்டமாகிறபக்ஷத்தில் ஒரு கலகத்துக்கும் இடமில்லை. அது சர்வஜன சம்மதமாயிருக்கும். ராஜாவினுடைய புத்திரன் அல்லது புத்திரிகை விஷயத்தில் சகல ஜனங்களுக்கும் அதிக கெளரவமும் மதிப்பும் பயபக்தியும் உண்டாகும். யுராஜாவுக்கு சாவில்லைரு என்கிற நீதி வாக்கியப்படி ஒரு அரசன் எந்த நிமிஷத்தில் இறந்து போகிறானோ அந்த நிமிஷத்தில் அவனுடைய வாரிசுக்குத் தேசாதிபத்தியம் உண்டாகிறபடியால், நியாயபரிபாலனங்களெல்லாம் நில்லாமல் தொடர்ச்சியாய் நடந்துவரும். ஆண் சந்ததியாவது பெண் சந்ததியாவது அல்லது வேறே உரிமைக்காரனாவது இல்லாமல் ஒரு அரசன் மாண்டுபோகிற பக்ஷத்தில், புது அரசன் நியமிக்கலாமே யல்லாது, தகுந்த சுதந்தரவாளிகளிருக்கும்போது புது அரசனை நியமிப்பது அசங்கதம். சகல விஷயங்களும் மகா மந்திராலோசனைச் சபையாருடைய அனுமதிப்படி நடக்கிறபடியால் ராஜாவின் வாரிசுகள் திறமையற்றவர்களாயிருந்தாலும்கூட அவர்களை நியமிக்கத் தடையில்லை. ராஜாவினுடைய வார்சுகளை நியமிப்பதினால் உண்டாகிற நன்மையையும் அதனால் விளையத்தக்க தீங்கையும் சீர்தூக்கிப் பார்க்குமிடத்தில் தீமையைப் பார்க்கிலும் நன்மைகள் அதிகமாயிருக்கிறபடியால் பாரம்பரை கிரமப்படி நியமிப்பதே உசிதமாயிருக்கிறது. அப்படியே புது அரசனையாவது அல்லது குடியரசையாவது நியமிப்பதனால் உண்டாகிற சாதக பாதகங்களை யோசிக்குமிடத்தில் சாதகத்தைப் பார்க்கிலும் பாதகம் பெரியதாயிருப்பதால் புதுராஜ நியமனத்தையுங் குடியரசையும் நிஷேதிக்கவேண்டியது, எல்லாருடைய கடமையாகவும்