பக்கம்:பிள்ளைக்கலி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置等含 போதுமா ? இந்த வடு... ? எது என்னை அல்லும் பகலுமாய் சித்ரவதை செய்ததோ, எதல்ை நான் என்னேக் கண்டு பூரிக்கும் போதும் மனத்துயர் மிகுந்தேனே, அந்த வடுவே என் மனதிற் கினியவளையும் பிரித்து விட்டதென்ருல்... ? இந்த வடுவைக் கத்தியினல் கீறிக் கீறி ரணமாக்கினல் என்ன ? செங்குருதி வடியச் செய்தால் என்ன ? "படபட"வெனக் கதவைத் தட்டியது கேட்டது. ஒன்றும் புரியாமல் கதவைத் திறந்தேன். 'யார் விஜயாவா ?' என் குரலில்தான் எத்தனை அமைதி, புயல் அடித்து ஒய்ந்த சோகம்!

  • , 3, §

ஆம் அவள் என் அநுமதியின்றி உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தாள். 'விஜயா, நான் இருப்பது தனி அறை. உங்கள் பெயர் என்னுல் களங்கமுறுவதை நான் விரும்பவில்லை. நீங்கள் எழுந்து சென்றுவிடுங்கள். ’’ அவள் என்னையே பார்த்தாள்; 'கோபம்தானே ? விளுப் பிறந்தது. 'இதென்ன விஜயா? நான் கோபித்தால் உங்களுக்கு என்ன? இத்தனைக்குப் பிறகும் உங்கள் பேச்சில் தொனிக்கும் உரிமையை நான் விரும்பவில்லை. இனிமேலும் என்ன இருக்கிறது? நீங்கள் போய்விடுங்கள். ' “நான் போகமாட்டேன். என்னுல் புண்படுத்தப்பட்ட உங்கள் நெஞ்சுக்கு ஆறுதலளித்து விட்டுத்தான் போவேன்...' 'ஆறுதல்...மணமேடையில் ஒரு பெண் என்ன உதறி விட்டு ஓடிய அவமானத்திற்கு ஆறுதல் ஏது?... இந்த வடுவைச் சுமந்து நான் உங்களை மறக்கத் தீர்மானித்து விட்டேன். நீங்கள் எந்தச் சமாதானமும் இனிச் சொல்லத் தேவையில்லை...' 'உங்கள் வடுவைக் கண்டு நான் வெறுக்கவில்லை. அது கிளறிய என் எண்ணங்களின் சுழலில் நான் அகப்பட்டு விட்டேன். தயவுசெய்து குறுக்கே பேசாதீர்கள். என் அண்ணு உங்கள் வயதுதான். சென்ற வருடம் இதே வடுவோடு ராணுவத்தி லிருந்து திரும்பி வந்தார். சின்ன வயதில் கோபித்துச் சென்ற வரை எண்ணி ஏங்கி உருகிய நாட்கள் மறைய, அவரை ஆவலோடு வரவேற்ருேம். அவரோ பிறந்த மண்ணுக்காகவே காத்திருந்து வந்ததைப் போல், எங்கள் அன்பில் சில தினங்கள் திக்கு முக்காடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/131&oldid=1395750" இலிருந்து மீள்விக்கப்பட்டது