பக்கம்:பிள்ளைக்கலி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

惑* நீங்கள்தான் இவர்களுக்குச் சொல்லுங்கள். நான் ...... என்று கூறி, மேலும் ஏதோ சொல்ல வாயெடுத்தார். இதைக் கேட்டவுடனே பக்கத்திலிருந்த இரண்டாவது மகனுக்கு உண்மை புரிந்து விட்டது. கந்தசாமி உடையார் முன்பு சிதம்பரம், சக மாணவர்களிடம் தம்மைப் பண்ணையாளென்று சொன்ன சேதியைச் சொல்லி வருத்தப்பட்டது அவன் நினைவுக்கு வந்தது. அண்ணன் செய்த தவற்றைத் தக்க சமயத்தில் சுட்டி இடித்துக் காட்டுகிருர் என்று உணர்ந்த அவன், நிலைமை இன்னும் மோசமாய்விடக்கூடாதென்று எண்ணி, என்ன அப்பாவுக்கு இருந்தாற்போலிருந்து புத்தி பேதலித்துவிட்டது!’ என்று சமயோசிதமாகக் கூறிக்கொண்டே, 'வா, அப்பா!' என்று கூப்பிட்டவாறு அவரைப் பரபரவென இழுத்துக் கொண்டு போய் விட்டான். சிதம்பரத்தின் நிலைமையோ பரிதபிக்கத் தக்கதாயிருந்தது. தந்தை கூறிய ஒவ்வொரு சொல்லும் கூரிய வேல்போல் அவனுள் ளத்தை ஊடுருவிச் சென்றது. அவர், நான் மாப்பிள்ளை வீட்டின் பண்ணையாள்’ என்று சொன்னபோது, "பண்ணையாள்’ என்பதை அழுத்திச் சொன்னதுமே, நாலு வருடங்களுக்கு முன், தான் தன் உடன் மாணவர்களிடம், எங்கள் பண்ணே யாள் என்று தன்னைப் பார்க்க வந்த தகப்பனே அறிமுகப் படுத்தியது நினைவுக்கு வந்தது. பெற்ற தகப்பனுக்கு எவ்வளவு பெரிய அபசாரம் செய்துவிட்டோம். அவர் உள்ளத்தை எவ்வளவு புண்படுத்தி விட்டோம்' என்பதை அவன் அந்தச் சமயத்தில்தான் உணர்ந்தான். அந்த உணர்ச்சி அவன் உள்ளத்தை உருக்கி விட்டது. அவனையறியாமல் அவன் கண்களில் நீர் ததும்பியது. காரணம் புரியாத மணமகள், கணவன்முகத்தை கூர்ந்து நோக்கினுள். அவளுடைய பார்வையிலிருந்து தப்ப, அவன் தலையைக் குனிந்து கொண்டான். குனிந்த தலை நிமிரவே யில்லே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/55&oldid=1395671" இலிருந்து மீள்விக்கப்பட்டது