பக்கம்:புகழ்மாலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

புகழ் மாலை


சுவர்போலும், கல்போலும், அந்தக் கல்லைச்
    சுடுகின்ற தீச்சூளை அடுக்கு போலும்,
புவி மீதுப் பலபேரைப் பார்த்தல் கூடும்.
    பொருளோடு, புகழோடு, மேன்மை செய்யும்
சுவையான பல்கலையின் திறமை யோடு
    சுற்றிவரும் இப்பெரிய உலக மண்ணில்,
இவனைப்போல் மிகப்பெரிய அறிஞன், ஆயின்
    இலைபோலச் சுலபத்தில் கிடைக்க மாட்டான்.

காயிடத்தில், கணிகின்ற தன்மையுண்டு.
    கல்வியிடம், சிந்தனையின் திறமையுண்டு.
சேயிடத்தில்; ஞானிகளின் மனது உண்டு.
    தினையிடத்தில், சத்தூட்டும் அணுக்களுண்டு.
தாயிடத்தில், சாகும்வரை, கருணையுண்டு.
    தாவிவரும் அலையிடத்தில், குளிர்ச்சியுண்டு.
யாவும் ஒர் கூட்டுறவாய் இருந்தாற் போன்று.
    இருந்திட்ட ஆச்சரியக் கவிஞன் இக்பால்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புகழ்மாலை.pdf/50&oldid=1491454" இலிருந்து மீள்விக்கப்பட்டது