பக்கம்:புராண மதங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



42 புராண - மதங்கள் களைப் படைத்தேன் , அதைக்கண்டவன் எடுத்தேகா வண்ணம், சுறாவையும் சுழல் அலையையும் அவைகட்குக் காவலாக்கினேன். தங்கத்தைப் படைத்தேன், அதைத் தாறுமாறாக உபயோகிக்காதிருக்க மறைத்தும் வைத் தேன். இவைகளை அறிய மக்களுக்கு அறிவும் அளித் தேன். வேறு என்ன தரமுடியும்? என்ன இருக்கிறது? இவ்வளவு தந்த எனக்கு அவர்கள் தந்தது என்ன?" என்று கேட்கலானார் பரமசிவன்! நாதா ! இதென்ன கேள்வி" என்று நாம் யாரும் கேட்க எண்ணுவது போன்றே பார்வதியார் கேட்டார் கள் "பரமன் என்ன தந்தார்கள்?" என்று மீண்டும் கேட்டார், கோபத்துடன். பிறகு இந்த உரையாடல் நடந்தது. "ஏன், அழகான ஆலயங்கள் தரவில்லையா?" எனக்கா? கோயிலிலே குடிபுகுந்து, கபட ாடக மாடிக் காசுபறிக்கும் கள்ளர்களுக்காக? யாருக்குக் காமாட்சி, ஆலயம்? எனக்கா? எனக்குக் குடியிருக்க இடமா கேட்டேன்? - நான் கேட்டது அதுவல்லவே. மக்களின் மனமன்றில் எனக்குக் கோயில் வேறு வேண்டுமா? அபிஷேகமும், ஆராதளையும் செய்கின்றனரே உமக்கு' "எனக்கா? ஏமாளிகள் காசிலே, பாடுபடாதவன் வாழ நடத்தும் கோமாளிக் கூத்தல்லவா அது?" "தேரும் தெருவிழாவும் ஊரூருக்கும் நடத்துகிறார் கள் உன்னைப் பெருமைப் படுத்த என்னைப் பெருமைப்படுத்தவா, குழலூதுவோனை யும், குறுநகை புரிவோனையும், இசைவாணனையும், இன்பவல்லிகளையும் பெருமைப்படுத்தவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராண_மதங்கள்.pdf/43&oldid=1033282" இலிருந்து மீள்விக்கப்பட்டது