உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயில்விழி மான்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மயில்விழி மான்

(4) ஒவ்வொன்றிற்கும் சராசரி பெட்ரோல் செலவு எவ்வளவு இருக்கும்?

(5) மொத்தப் பெட்ரோல் செலவு என்ன?

(6) கெட்டுப் போகும் கருவிகளைப் புதுப்பிக்கும் செலவு என்ன?

(7) கிராமாந்தரங்களின் ஏழைக் குடியானவர்களிடமிருந்து நகரவாசிகள் பெறும் பணத்தில் மோட்டார் மூலமாக மட்டும் எவ்வளவு ரூபாய் வருஷந்தோறும் அயல்நாட்டுக்கு அனுப்புகிறார்கள்? அல்லது நீங்கள் சமூக நிலைமையைப் பற்றிய ஆராய்ச்சியில் சிரத்தை உடையவர்களானால் அங்கு நிற்கும் மோட்டார் வண்டிகளின் இலக்கங்களை யெல்லாம் குறித்துக் கொண்டு பின்வரும் விவரங்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கலாம்:—

கிண்டி குதிரைப் பந்தயத்திற்குப் போகும் சென்னைப் பெரிய மனிதர்களில்,

(1) சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் எத்தனை பேர்?

(2) அட்வொகேட்டுகள் எத்தனை பேர்?

(3) நியாயாதிபதிகள் எவ்வளவு பேர்?

(4) பத்திராதிபதிகள் எத்தனை பேர்?

(5) சட்டசபை அங்கத்தினர்கள் எவ்வளவு பேர்?

(6) பாங்கி முதலாளிகள் எத்தனை பேர்?

(7) வியாபாரிகள் எத்தனை பேர்?

(8) கலாசாலை ஆசிரியர்கள் எவ்வளவு பேர்?