பக்கம்:மயில்விழி மான்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மயில்விழி மான்

17

இல்லாத நிர்மானுஷ்யமான தீவாக இருந்தாலும் இருத்தல் கூடும். பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது. மனிதர்கள் வசிப்பதாயிருந்தால், மதிள்

சுவரின் உச்சியில் யாராவது இருக்கலாம் அல்லவா? கோட்டையும் மதில் சுவரும் கட்டிக் கொண்டு வாழ்கிறவர்கள் மேலே காவல் வைக்காமலா இருப்பார்கள்?

3

டுத்தகணம் பைனாகுலரை எடுத்துக் கண்ணில் பொருத்திக் கொண்டு மதில் சுவரின் உச்சியில் பார்வையைச் செலுத்தினேன். ஏதோ சில நிழல் வடிவங்கள் தெரிந்தன. அவை சித்திரமோ, சிற்பமா, உயிருள்ள வடிவங்களா என்று தெரியவில்லை. உயிர் உள்ளவர்களாயிருந்தால், அவர்களுடைய கவனத்தை எப்படிக் கவர்வது என்று சற்று நேரம் யோசித்தேன்.

99-2