பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 பேராசிரியர் ந.சஞ்சீவி கடுமையாக நடத்தப்பட்டுக் கடைசியில் சிறையில் இடப்பட்டார். இவ்வாறு மறவர் சீமையில் ஏற்பட்ட பெரும்போராட்டத்திற்குக் காரணமாயிருந்த பவானி சங்கரரின் ஆட்சி 1729-ல் முடிவுற்றது. இப்பெருவெற்றிக்குப்பின் கிழவன் சேதுபதி காலத்தில் ஐயாயிரம் சதுர மைல் நிலப்பரப்பாய் இருந்த இராமநாதபுரச் சீமை, துண்டு துண்டாக்கப்பட்டது. அதன் பயனாகப் பாம்பாற்றிற்கு வடபால் உள்ள பகுதிகளை எல்லாம் தஞ்சை அரசன் கவர்ந்து கொண்டான். எஞ்சிய பகுதிகள் ஐந்து கூறாக்கப்பட்டன. ஐந்தில் மூன்றைக் கட்டையத் தேவர் எடுத்துக் கொண்டார்; அப்பகுதிக்கு அரசராய்க் குமாரமுத்து விஜய ரகுநாதர் என்ற பட்டப் பெயருடன் அவர் முடி சூட்டிக் கொண்டார். எஞ்சிய இரு பகுதிகளையும் பெரும்பாலும் நாலுகோட்டை உடையத் தேவர் என்று வழங்கப்பட்ட சசிவர்ணத்தேவர் தமக்குரியனவாக்கிக் கொண்டு ராஜமுத்து விஜய ரகுநாத பெரிய உடையத் தேவர் என்ற சிறப்புப் பெயருடன் சிங்காதனம் ஏறினார். நாளடைவில் அவர் சிவகங்கை அரசர் என்று வழங்கப்பட்டார். அறிஞர் நெல்லன் ஆராய்ந்து எழுதிய நூலினின்றும் கிடைக்கும் குறிப்பு ஒன்றால், சசிவர்ணர் சிவகங்கை அரசைப் பெற்ற சுவை பொதிந்த செய்தி விளங்குகிறது. 'சிவகங்கை ஜமீந்தாரின் குத்தகைக்காரரான மிஸ்டர் பிஸ்சர் அன்புடன் தேடிக் கொடுத்த (கு.கு. 1655 அல்லது கி.பி. 1733ல் செதுக்கப்பட்டு வெளியிடப்பட்ட) மிக முக்கியமான செப்புச் சாசனத்தின் பிரதி ஒன்று கூறுவதாவது: பெரிய உடையத்தேவரின் மைந்தரும் ஹிரண்ய கர்ப்ப அரசுபதி இரகுநாத சேதுபதியின் மருமகனாருமாகிய முத்து விஜய இரகுநாத பெரிய உடையத்தேவர், மற்ற அரசர்களைப் போன்று வைகைக் கரையிலுள்ள செழிப்பான நிலங்கள், செம்பியன் வளநாடு, தொண்டித் துறைமுகம் முதலியவற்றிற்குச் சொந்தக்காரராயிருந்தார். யாரோ ஒரு ஞானியார் (இவர் பெயரில் தரப்பட்ட தானத்தின் நினைவுச் சின்னமே இச்சாசனம்) செய்த உபதேசத்தின் பயனாய் அவர் தஞ்சாவூர் சென்று, அங்கு ஒரு புலியைக் கொன்றுவிட்டு, அந்நாட்டினின்றும் திரும்பி வந்த பின், பவானி சங்கரத் தேவரை வென்றார்.அதன் பிறகு ஞானியாரை முதன்முதலில் அவர் சந்தித்த ஊரினருகே ஒரு குளம் கட்டி, அங்கே அவருடைய உபதேசமொழிகளைக் கேட்டு, அக்குளத்திற்குச் சிவகங்கை அல்லது சிவனது தீர்த்தம் என்று பெயரிட்டார். சாசனமும் அவரை அரசு நிலையிட்டவன் அல்லது அரசை நிலை நிறுத்தியவன் (ஸ்தாபித்தவன்), சோழ மண்டலச் சண்டப்பிரசண்டன் அல்லது சோழ நாட்டின் சர்வ வல்லமையுள்ளவன், பாண்டி மண்டல ஸ்தாபனாசாரியன் அல்லது பாண்டிய ராஜ்யத்தைத் தோற்றுவித்தவன் என்றே குறிப்பிடுகிறது. மொத்தத்தில் இந்தச் சாசனத்திற்கும் பொன்னுசாமித்தேவரின் விண்ணப்பத்தில் குறிக்கப்பட்டிருக்கும்