பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 96 அலி 1742ல் தன் உறவினர் ஒருவரால் கொலை செய்யப்பட்டான். இதன் பிறகு அவன் மகனான இரண்டாம் சாதத் உல்லா நவாபுவானான். இதற்குள்ளேதான் கர்நாடகத்தில் ஏற்பட்ட குழப்பத்தை நீக்கத் தட்சிண சுபேதாரான நிலாம் - உல்-முல்கு, கர்நாடகத்திற்கு வந்து, அன்வருதீன் முகம்மதுவை ஆர்க்காட்டு நவாபுவாக 1744 இல் நியமித்தான். ஐந்து ஆண்டுகள் வரை அவன் ஆட்சி நடந்தது. 1748ல் நிலாம்-உல்-முல்கு இறக்கவே, ஐதராபாதில் நாசிர், முசாபர் என்ற இருவருக்குமிடையே அரசுரிமைப் போட்டி நிகழ்ந்தது. இந்த அரசுரிமைப் போராட்டத்தில் அன்வருதீனும் அவன் மகன் முகம்மதலியும் ஒரு கட்சியாகவும், சந்தாசாகிபு இன்னொரு கட்சியாகவும் இருந்து பெரும்போர் உடற்றினர். அன்வருதீன்-முகம்மதலிக்கும் சந்தா சாகிபுவுக்கும் இடையே ஏற்பட்ட போராட்டம் வெளியே ஆர்க்காட்டு நவாபுகளின் அரசுரிமைப் போராட்டமாய்க் காணப்பட்டாலும், உண்மையில் அஃது ஆங்கில பிரெஞ்சு ஆதிக்கப் போராட்டமே. ஏற்கெனவே சந்தா சாகிபு மராத்தியரால் கைது செய்யப்பட்டுச் சதாராவுக்குக் கொண்டு போகப்பட்டான் என்பதை நாம் அறிவோம். மராத்தியர்களுக்குப் பெருந்தொகை கொடுத்துச் சந்தா சாகிபுவை விடுதலை செய்தான் பிரெஞ்சுக்கவர்னர் டூப்ளே, முசாபர் பிரெஞ்சியர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டான். அதன்படி அவனை நைசாம் ஆக்குவதற்குச் சந்தா சாகிபுவும் பிரெஞ்சியர்களும் உதவ வேண்டுமென்றும், அதற்குப் பதிலாகச் சந்தா சாகிபுவை நவாபுவாக்கத் தாங்கள் துணை புரிவதாகவும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி ஆர்க்காட்டு நவாபுவான அன்வருதீன் கொலை செய்யப்பட்டான். சந்தா சாகிபு தன்னை ஆர்க்காட்டு நவாபுவாகப் பிரகடனம் செய்து கொண்டான். எனவே ஆம்பூர் வெற்றி சந்தா சாகிபுவுக்கு அமைதியைத் தரும் இறுதி வெற்றியாய் இல்லை. அரசுரிமைப்போர் தொடர்ந்தது. முகம்மதலியும் ஆங்கிலேயரும், தஞ்சை அரசரும், புதுக்கோட்டைத் தொண்டைமானும், மைசூராரும், மராத்தியரும் ஒரு தரப்பில் நின்றனர். இவர்களை எதிர்த்துச் சந்தா சாகிபுவும், பிரெஞ்சியர்களும், மதுரை ஆலம்கானும் அணி வகுத்தனர். இருதரப்புக்குமிடையே நடந்த கடும் போரில் எத்தனையோ சிக்கல்கள், சூழ்ச்சிகள், சதிகள் அமைந்தன. எல்லாவற்றையும் கடந்து இறுதியாக முகம்மதலியும் ஆங்கிலேயரும் வெற்றி பெற்றனர். சந்தா சாகிபு 1752ஆம் ஆண்டு, ஜூன் மாதம் திருச்சிக்கு அருகில் நடநத போரில் கொலை செய்யப்பட்டான். சந்தா சாகிபுவின் வாழ்க்கை கோரமான முடிவைக் கண்டது. கண்டதுண்டமாக்கப்பட்ட அவன் உடல், எவ்வெவ்வாறோ, எங்கெங்கோ, புதைக்கப்பட்டது. சந்தா சாகிபுவின் வீழ்ச்சி மூலம் ஆங்கிலேயர் கை வலுவடைந்தது. முகம்மதலி ஆர்க்காட்டு நவாபு ஆனான். பிரெஞ்சு ஆதிக்கம் நசித்துப் போனது.