பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 102 சேதுபதி இராக்கத் தேவரின் ஆட்சி ஓராண்டில் முடிவெய்தியது. வெள்ளையன் சேர்வைக்காரர் சிறந்த வீரர். இவர்க்கும் சேதுபதிக்கும் இடையே மனவேறுபாடு மிகுந்தது. வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வையாரின் வரம்பில்லா ஆற்றலையும் வசையில்லாப் புகழையும் கண்டு வெகுண்டார் சேதுபதி. தஞ்சை மன்னது படையெடுப்பை வெற்றிகரமாய் முறியடித்துப் பின் திருநெல்வேலிச் சீமையில் பாளையக் காரர்களின் கொட்டத்தை அடக்க முகாமிட்டுக் கொண்டு இருந்தார் வெள்ளையன் சேர்வைக்காரர். அவரை உடனே அக்காரியத்தை விட்டுவிட்டு வரும்படி உத்தரவிட்டார் சேதுபதி. யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டது போல ஆயிற்றுச் சேதுபதியின் இச்செயல். திருநெல்வேலியிலிருந்து திரும்பிவந்த தளவாய்ச் சேர்வை சேதுபதிக்கெதிராகப் படை திரட்டினார் போரிட்டார். அரசரைக் கைது செய்தார். அரசுரிமையைச் செல்ல முத்து விஜய ரகுநாத சேதுபதி என்பாருக்கு உரிமையாக்கினார். இப்புதிய சேதுபதி பதின்மூன்று ஆண்டுகளும், ஆறு மாதங்களும், ஒன்பது நாள்களும் நாடாண்டார். இவர் காலத்தில் பெரிய மருதுபாண்டியர் ஒரு வயதுக் குழந்தை. செல்லமுத்து விஜயரகுநாதர் ஆட்சியில் மீண்டும் ஒரு முறை தஞ்சை மன்னனது படையெடுப்பு முறியடிக்கப்பட்டது. தளவாய் வெள்ளையன் சேர்வையாரோடு சேர்ந்து இச்சேதுபதி தம் காலத்தில் செய்த அறப்பணிகள் கணக்கற்றவை. 1754 ஆம் ஆண்டில் வெள்ளையன் சேர்வையாரும் சிவகங்கை அமைச்சர் தாண்டவராயப்பிள்ளையும் தோளோடு தோள் சேர நின்று மைசூர் மன்னரின் சார்பாக மதுரையைக் கைப்பற்றியிருந்த கேப்டன் கோப்பு என்பவனைப் போரில் புறங்கண்டனர். அவ்வமயம் மதுரையை ஆண்டநாயக்க வமிசத்தின் கடைசிப் பிரதிநிதியாகிய இராணி மீனாட்சியின் சுவீகாரப் புத்திரனுக்குப் பட்டம் சூட்டியும் வைத்தனர். ஆனால், அவர்கள் செய்த காரியம் நெடுநாள் நீடிக்கவில்லை. மதுரை முகம்மதியர்கள் கைவசமாயிற்று. மேலும் இராமநாதபுரத்தை முகம்மதியர்கள் தாக்கவும் துணிந்தார்கள். ஆனால், அவர்கள் இறுமாப்பை நொறுக்கி எறிந்தார் வெள்ளையன் சேர்வையார். செல்லமுத்து விஜயரகுநாத சேதுபதி ஆரம்பத்தில் சந்தா சாகிபுவையும் மைசூராரையும் முகமதலிக்கு விரோதமாக ஆதரித்தார்; ஆனால், 1755 இல் ஆங்கிலேயர்களோடு நேச உடன் படிக்கை செய்து கொண்டார். ஆங்கிலேயர்கட்கு இலங்கையோடு இடரின்றி வியாபாரம் செய்யத் தம் தென்பாண்டிக் கடற்கரையில் இரண்டிடங்களைத் தருவதாகவும் வாக்கு அளித்தார்; இவ்வாறே 1759இல் டச்சுக்காரர்களுக்கும் கீழ்க்கரை என்னுமிடத்தில் பண்டகசாலை நிறுவ அனுமதி அளித்தார். ஒரு வகையில் ஆங்கிலேயர் ஆட்சிக்குத் தமிழகத்தில் நல்வரவு கூறிவிட்டுச்செல்லத் தேவர் 1782-ஆம் ஆண்டில் விண்ணுலகம்