பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 112 வழிபாடு செய்து கேடு செய்யும் துஷ்டர்கள் கெட்டொழிந்து போகவே நாடு கூடி வாழவே நல்லசிவம் அருள்கவே என்று இறைவனை வணங்குவார்களாம் அச்சகோதரர்கள். அவர்களது கடவுள் பத்திக்குச் சான்று பகர்வனவாக அவர்கள் செய்துள்ள திருப்பணிகள் பலவாகும். சிவகங்கைக்குப் பத்து மைல் தொலைவிலுள்ள காளையார் கோவில் கோபுரம் மருது சகோதரர்களின் புகழை வானுற உயர்த்திக் காட்டுவதுபோல நிமிர்ந்து நிற்கும் காட்சி, கண்கொள்ளாக் காட்சியாகும். காளையார் கோவில் கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்த்தால், மதுரைக் கோபுரம் பளிச்சென்று தெரியும். மதுரைக் கோபுரம் தெரியக் கட்டினவரல்லவா மருது பாண்டியர் கருமலையிலே கல்லெடுத்துக் காளையார் கோவில் உண்டு பண்ணிய அவரது கைத்திறத்தை நாட்டுப் பாடல்கள் அழியா வரலாறு ஆக்கிக்காட்டும் அழகே அழகு" காளையார் கோவில் கோபுரம் கட்டப் பல மைல் தொலைவிலுள்ள மானா மதுரையிலிருந்து கை வழியாகச் செங்கற்கள் வந்து சேர்ந்தனவாம். அவர் நினைத்தால் ஆகாதது ஒன்று உண்டோ? காளையார் கோவிலிலுள்ள சோமேஸ்வரசுவாமி ஆலயமும் மருதரசரால் கட்டப்பட்டதே யாகும். இக்கோவிலுக்காகப் பெரியதொரு தேரினையும் மருது பாண்டியர் செய்வித்தனராம்." காளையார் கோவிலிலுள்ள ஆனை மடு என்னும் அழகான நீராழியைப் புதுப்பித்தவர்களும் மருது சகோதரர்களே. மேலும், கோவிலில் சோதியாய்ச் சுடராய்ச் சூழ் ஒளிவிளக்காய்த் திகழும் திருவாட்சித் தீபமும் மருதரசர் உபயமே என்பது அதில் பொறிக்கப்பட்டுள்ள அவர் பெயரால் விளங்கும். இத்தீபங்கட்கு இலுப்பை நெய் வார்க்க மருதரசரால் விடப்பட்ட மானியமே இலுப்பந்தோப்புக்கள் நிறைந்த மணவராயன் ஏந்தல் என்பர். மருதரசர் காலத்தில் இலுப்பை நெய் ஊற்றி வைக்கப் பயன்பட்ட சாடிகள் இன்னும் காளையார் கோவிலில் காட்சி அளிக்கின்றன." 2. மதுரையில்: மதுரை மீனாட்சியும், காஞ்சி காமாட்சியும், காசி விசாலாட்சியும் பாரத மக்கள் போற்றும் பழம்பெருந் தெய்வங்கள். மதுரையை ஆண்ட அன்னை அரசி என்று திருவிளையாடல் புராணம் போற்றும் அம்மையின் ஆலயத்திற்கு மருதரசர் செய்த திருப்பணிகள் போற்றற்குரியனவாகும். மீனாட்சி அம்மையின் சந்நிதியில் அழகுற விளங்கும் இரு திருவாட்சித் தீபங்களும் இன்றும் மருது பாண்டியர் புகழை ஒளியுடன் விளங்குமாறு செய்து வருகின்றன. இத்தீபங்கட்கு நெய் வார்க்க மருதரசர் விட்ட மானியமே ஆவியூர்க் கிராமம். இஃதன்றியும், ஆறு காலத்திலும் அன்னையின் பூசைக்காகத் தக்க மானியங்களையும் உப்பிலிக் குண்டு, கடம்பங்குளம், சீகனேந்தல், மாங்குளம், மங்கை ஏந்தல், பூவனேந்தல்