பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 114 மகாராஜா சத்திரபதி - போதகுரு மகாராஜா அவர்களது துரைத்தனத்தில் சிவகங்கையில் இருக்கும் மருது சேர்வைக்காரர். உபயம். 5. திருப்பத்தூரில்: திருப்பத்தூரிலுள்ள பைரவசாமி கோவிலிலும் மருதரசருக்கு மிக்க ஈடுபாடுண்டு. அங்குக் கோவில் கொண்டுள்ள இறைவரின் மார்பில் மருது சேர்வை' என்ற பெயர் பொறித்த பதக்கம் இன்றும் காட்சி அளிக்கிறது என்பர். 6. மானூரில்: நரிக்குடி முக்குளத்திற்கு அருகில் உள்ள இவ்வூரில் அழகிய சுப்பிரமணிய சுவாமி கோயில் ஒன்று உண்டு. இக்கோவிலைக் கட்டியவர் ஒரு துறவியாராம். எனினும், இக்கோவிலுக்குக் கோபுரமும் தேரும் மருதரசரால் அமைக்கப்பட்டவைகளே என்பர். இக்கோவிலில் நடைபெறும் விழாக்களுக்கு மருது பாண்டியர் மானியங்கள் அளித்துள்ளனராம். திருவிழாச் சமயத்தில் தம் குடும்பத்தார் நினைவாக நான்காம் நாள் விழா நடக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளார் மருதரசர். 7. வீரக்குடியில்: நரிக்குடி - முக்குளத்திற்கு அருகில் உள்ள முருகர் கோவிலும் மருதரசர் பணிகளைக் கண்ட பெருமையுடையது. அங்கு வெள்ளை மருதுவின் அழகிய சிலை ஒன்று உள்ளது." 8. திருச்சுழியில் மகரிஷி இரமணர் பிறந்த திருச்சுழியில் கோவில் கொண்டுள்ள பூமிநாத சுவாமி துணைமாலம்மான் என்னும் இருவருக்கும் மருது மன்னர் மண்டபங்களை நிறுவியுள்ளார் என்பர். 9. தடுத்துப்புணங்கியனூரில்: இவ்வூரிலுள்ள பூரீராமநல்லூர் விநாயகர் கோவிலுக்கு இவ்வூர்க் கணக்கரின் பிரார்த்தனைப்படி நான்கு செய் நிலங்கள் மானியமாக அளித்தாராம் மருதரசர். 10. ஏரியூர் போர் நடந்து கொண்டிருந்த ஒரு சமயம் பெரிய மருது திருப்பத்துர்த் தாலுக்கா (அந்நாளில் மல்லாக்கொட்டைத் தாலுக்கா என்று வழங்கப்பட்ட தாம்) காடுகளில் சுற்றிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் தம் குதிரைமேலேறிச் சவாரி செய்து கொண்டு ஏரியூர்க் கண்மாய்க்கரையை வந்து அடைந்ததும் குதிரை நகர மறுத்ததாம். எவ்வளவு முயன்றும் குதிரையை அரசரால் நகர்த்த முடியவில்லை. அவர் அங்குள்ளவர்களை இங்கு ஏதாவது சிறப்பு உண்டா? என்று கேட்டாராம். அங்குள்ளவர்கள் இங்குக் கழுகு ஐயனார் இருக்கிறார். அவர்க்கு நீங்கள் ஏதாவது திருப்பணி செய்வதாக வேண்டிக் கொண்டால் குதிரை நகரும்; உங்கட்கும் புண்ணியம் உண்டாகும் என்றார்களாம். அங்கேயே அதற்கான ஏற்பாடுகளைச் செய்ததோடு மருதரசர் அக்கோயிலுக்காக நன்செய், புன்செய் மானியங்களாக விட்டார் என்றும் கூறுவர். இவ்வூரில் இப்போதும் பங்குனி உத்திரத்தன்று மருதுவின் பெயரால் அஷ்டோத்திர ஜபம் நடைபெறுகிறதாம்.