பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 பேராசிரியர் ந.சஞ்சீவி கவிஞரைப் போற்றிய காவலர்: பழந்தமிழ் மன்னர்களைப் போலவே மருது பாண்டியரும் தமிழ்ப்புலவர்களை ஆதரிப்பதில் தலை சிறந்து விளங்கினர். அவருடைய சமஸ்தானத்தில் இருபத்தொரு தமிழ் வித்துவான்கள் இருந்தார்கள். அவரைப் பாராட்டி அவர்கள் பாடிய செய்யுள்கள் பல." மருது பாண்டியரைப் போற்றிப் புகழ்ந்து அப்புலவர் பெருமக்கள் பாடிய பாடல்கள் அனைத்தையும் இன்று நாம் கண்டு கற்கும் பேறு பெற்றோம் இல்லை. ஆயினும், சிற்சில தனிப்பாடல்கள் ஆங்காங்கே கிடைக்கின்றன." தொன்றுதொட்டே நன்றி உணர்ச்சியும் கடவுள் அன்பும் மிக்க நற்றமிழ்ப் பாவலர்கள் தங்கள் உள்ளங்கவர்ந்த மன்னர்களைப் பற்றிய குறிப்புகளையும் தெய்வங்களைப் பற்றிய செய்திகளையும் அகப்பொருள் நூல்களில் நயமாகச் செறித்து வைத்துப் பாடும் பண்பும் மரபும் உண்டு. இவ்வுண்மையைச் சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் பரக்கக் காணலாம்; திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை முதலான தீந்தமிழ் நூல்களிலும் விரிவாகக் காணலாம். இவ்வாறு புலவர் பாடும் புகழ் பெற்ற புண்ணியர் நம் மருதரசர் என்பதை நினைக்கும்போதே நம் நெஞ்சம் தேன் கடலாகிறது. ஆம். இந்திய விடுதலைக்காகப் போரிட்டு மடிந்த தமிழ் வீரரான மருதுவின் புகழ் மயூரகிரிக் கோவை' என்னும் சுவை மலிந்த கோவை நூலால் என்றும் அழியா ஏற்றம் பெற்றுள்ளது. இக்கோவை நூலை இராமநாதபுரம் சம்ஸ்தான வித்துவானாய் இருந்த சர்க்கரைப் புலவர் குமாரர் சாந்துப் புலவரை இயற்றுமாறு செய்தருளியவர் மருது பூபதியே என்பது இந்நூலுக்கு அமைந்துள்ள பழைய சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றால் இனிது விளங்குகிறது." இந்நூல் அரங்கேறிய காலம் கி.பி.1778 என்பது தெரிகிறது." புலவர் பெருமானராகிய சாந்துப்புலவர் தம் இலக்கிய இலக்கணப் புலமையும், பாநலமும், கற்பனை வளமும் புராணப் பயிற்சியும் தெள்ளிதின் விளங்கப் பாடிய இக்கோவை நூலை அரங்கேற்றியபோது பல ஆடையா பரண வாகனாதி விருதுகளுடன் காளையார் கோவிலுக்கு அருகில் இப்போது புலவன் மருதன்குடி என வழங்கும் கிராமத்தையும் சம்மானமாக மருது பாண்டியர் மனமுவந்து தந்தாராம். இவ்வுண்மை அச்சமயத்தில் இப்புலவர் பெருந்தகையால் பாடப்பெற்றதாய் அறியப்படுகின்ற அழகிய கட்டளைக்கலித்துறைப் பாட்டொன்றால் விளங்குகிறது." மயூரகிரிக் கோவையின் ஆசிரியருக்கும் மருதரசருக்கும் தொடர்பேற்பட்ட வரலாறு மறக்க முடியாத சரித்திரச் செய்தியாகும். நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அவ்வரலாற்றை மயூரகிரிக் கோவையை அரும்பாடுபட்டுத் தேடி ஏட்டிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்த தமிழ்ப் பெரியார்- மன்னார்குடி பின்ட்லே கல்லூரித் தமிழ்ப் பண்டிதர்