பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 128 போனவுடன் பிரிவாற்றாது துயரக் கடலின் மூழ்கினவராய்த் தமது ஊராகிய சிறுகம்பையூருக்குச் சென்று, பின்னொரு வாரத்துள் சிவபெருமான றிருவடி நீழலை அடைந்தனர். பின்னர் இவருடைய குமாரராகிய சர்க்கரைப் புலவரை இவர் பிதாவாகிய சர்க்கரைப் புலவர் சில காலம் படிப்பித்துப் பாதுகாத்தனர் என்று கூறுப. 'இதனால் இப்புலவருடைய செய்ந்நன்றி மறவாமையென்னும் உத்தமக் குணமும், தம்மையாதரித்த பிரபுவினிடத்தில் வைத்திருந்த பேரன்பும், காணுத லொழிக நல்லார்க் காணினங் கவர்பா னட்புப் பேணுத லொழிக பேணிற் பிரிவுற லொழிக வுற்றால் மானுயி ருடம்பில் வாழும் வாழ்க்கைபோ யொழிக வென்னா ஊணிடு மொருதாய் நீத்த பார்ப்பென வுளங்கு லைந்தார். -பிரபுலிங்க லீலை - கோரக்கர்கதி-4 என்ற ஆன்றோர் வாக்குக்கிணங்க உத்தம நண்பரைப் பிரிந்துயிர் வாழாமையென்னும் நட்புத்திறனும் நன்குணரலாகும்." இவ்வாறு வாழ்விலும் சாவிலும் கணவனும் கற்புடைய மங்கையும் போல வாழ்ந்த சாந்துப்புலவர் இயற்றிய மயூரகிரிக் கோவையின் தமிழ்ச்சுவை அரசஞ் சண்முகனார் போன்ற பெருந்தமிழ்ப் புலவரேறுகளாலும் பாராட்டப் பெற்ற பெருமை வாய்ந்ததாகும்." ஐந்நூற்று முப்பத்தாறு அருஞ்செய்யுள்களைக் கொண்ட மயூரகிரிக் கோவையில் பதினான்கு பாடல்கள் மருதரசர் புகழ் பேசுபவையாகும். மருது பூபதியால் தருமகர்த்தாவாக்கப் பெற்றுத் திருவண்ணாமலை ஆதீனத்தைச் சார்ந்தவராயிருந்த சங்கரலிங்க முனிவருடைய ஈகை, அன்பு முதலிய பெருமைகளை இரு பாடல்களில் போற்றியுள்ளார் இக்கோவையின் ஆசிரியர். இஃதன்றி, மருது பூபதிக்குச் சகோதர பாந்தமுள்ளவராகிய காடன் செட்டியாருடைய" மண்டபப்படிச் சிறப்பையும் ஒரு பாடலில் பாராட்டியுள்ளார். இப்பாடல்கள் அனைத்தையும் இந்நூலின் பிற்சேர்க்கையில் தனித்தனியே கண்டு களிக்கலாம்." புலவர் போற்றும் பெருமை சான்ற சாந்துப்புலவர்' பாடிய மயூரகிரிக் கோவையாலேயேயன்றி வேறு தனிப்பாடல்களாலும் மருது பாண்டியர் புகழ் விளங்குகின்றது. காலவெள்ளத்திற்கும் கறையானுக்கும் இரையாகியது போக எஞ்சியுள்ள சில தமிழ்ப் பாடல்கள் விஞ்சு சுவையுடையவைகளாய்த் திகழ்கின்றன. இங்கு இரு இனிய பாடல்களை மட்டும் பார்ப்போம். மருதரசர் ஐந்து மனைவியரை மணந்து இன்ப வாழ்வு வாழ்ந்தவர். அவர் காதல் திருமணம் புரிந்து கொண்ட மனைவியருள் ஒருத்தி-மீனாட்சி ஆத்தாள் அயல் சாதிப் பெண்." இத்தகைய கருத்தொத்த காதல்