பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 பேராசிரியர் ந.சஞ்சீவி 1792 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 12ஆம் தேதி நவாபுவுடன் ஒரு புதிய உடன்படிக்கை உருவாகியது. அதில் நாடு முழுவதும் பிரிட்டிஷ் படைகளால் சூழப்பட்டிருக்கும் என்பதும், அதன் செலவிற்குத் தேவையான தொகையை நவாபு கொடுக்க வேண்டுமென்பதும் குறிக்கப்பட்டன. போர்க்காலங்களில் கம்பெனி நாட்டின் முழு நிருவாகப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளும் என்றும், ஆனால் அமைதியான காலங்களில் நாட்டின் சிறந்த நிருவாக நலனுக்காகக் கப்பம் அல்லது பாளையக்காரரின் காணிக்கை நவாபுவின் பெயரால் வசூலிக்கப்படும் என்றும் அது அவன் பெயரில் வரவு வைக்கப்படும் என்றும் கண்டிருந்தது. இந்த ஏற்பாட்டால் பாளையக்காரர்கள் முன்பு இருந்ததைவிட ஆங்கில அரசாங்கத்தின் நேரடி அதிகாரத்திற்குக் கொண்டு வரப்பட்டார்கள். ஆனால், நவாபு தன் கடன்களைச் சரிக்கட்டுவதற்காகப் புதிது புதிதாகப் பெருந்தொகைகளைக் கடன் வாங்கிக் கொண்டு அத்தொகைக்கு ஈடாக வெவ்வேறு மாவட்டங்களின் வருமானங்களைக் கடன்காரர்களுக்கு எழுதிக் கொடுத்தான். இதனால் நாட்டு மக்களிடையே ஏற்பட்ட எதிர்ப்பும் விளைந்த இன்னலும் அளவிறந்தன. 1792-ல் ஏற்பட்ட ஒப்பந்தம் கருதிய பயன்களைத் தாராததால், அதனால் உண்டான தீமைகளைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் பல சென்னை அரசாங்கத்தால் செய்யப்பட்டன. அவற்றுள் ஒரு திட்டம் திருநெல்வேலியிலுள்ள தேசக்காவல் - தலங்காவல் வருமானங்களை அதிகாரப்பூர்வமாகச் சென்னை அரசாங்கமே வசூலித்துக் கொள்வது என்பதாகும். இதனால் வரி விதிக்கும் உரிமையும், வரி வசூலிக்கும் உரிமையும், பாளையக்காரர்களின் கப்பத் தொகைகளை வேண்டியவாறு மாற்றுதல் முதலியவற்றிற்கான உரிமையும் கம்பெனி வசம் இருந்தன. ஆயினும், அரசாங்க நிருவாகம் நவாபுவின் கையிலிருக்கும் வரை நாட்டின் நல்லாட்சிக்கு ஒரு சிறிதும் பயன் ஏற்படாதென்று சென்னை அரசாங்கம் கருதியது. இது காறும் நாம் கண்ட உண்மைகளால் தமிழகம் இரட்டை ஆட்சியால் - கணக்கற்ற குட்டி நவாபுகளின் அதிகார வேட்கையால் - பாழாகிக் கொண்டிருந்தமை புலனாகும். இந்நிலையிலேதான், இனிப் பொறுக்க முடியாது இந்த ஈன வாழ்வு, என்ற சுதந்தர வேகம் தமிழ்நாட்டுத் தலைவர்கள் நெஞ்சில் பொங்கி எழுந்தது. தென்பாண்டி நாட்டில் தமிழ் மக்களின் சுதந்தர ஆவேசமாகிய எரிமலை இரண்டாவது முறையாக 'குபீர் என வெடித்தது. முன்னம் பூலித்தேவர் மூட்டிவிட்ட சுதந்தரக் கனல் நீறுபூத்த நெருப்பாய்க் கனன்று கொண்டே இருந்தது." ஆம், 1797 ஆம் ஆண்டில் இராமநாதபுரத்தில் அது புரட்சித் தீ, காட்டுத் தீயாய்க் கனன்றது. அப்புரட்சியில் அநேகமாகத்திருநெல்வேலிப் பாளையக்காரர் அனைவரும்