பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 162 "தொண்டைமான் புதிய ராஜாவாகிய படமாத்தூர் கெளரி வல்லபப் பெரிய உடையத் தேவனை மிக்க மரியாதையோடு தன் நாட்டிற்குள் வரவேற்றான். அந்தப் படமாத்தூர் உடையத்தேவன் பிரிட்டிஷாரால் சிவகங்கைக்கு அரசனாக்கப்பட்டவன்; விடுதலை வீரர்களின் பட்டாளத்தின் ஒற்றுமையைப் பிளப்பதற்குப் பெரிதும் பயன்பட்டவன். சென்னைக் கவர்னர் 1801 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தப் புதிய ராஜாவுக்குத் தொண்டைமான் ஆதரவளிக்க வேண்டுமென்று கடிதம் எழுதியிருந்தான். கவர்னரின் கருத்துவழி நடந்தான் தொண்டைமான். "சிவகங்கைச் சீமையின் புதிய ராஜாவிற்கு ஆபத்து எதுவுமின்றிக் கர்னல் அக்கினியூவின் முகாமிற்கு அழைத்துச் செல்ல ஐந்நூறு வீரர்களைத் தந்துதவுமாறு தொண்டைமான் கேட்டுக் கொள்ளப்பட்டான். வெள்ளையரின் விருப்பத்தை அறிந்த தொண்டைமான் தொள்ளாயிரம் வீரர்களைப் புதிய ராஜாவுக்குத் துணையாக அனுப்பியதோடன்றித் தானும் அந்த ராஜாவுக்கு மெய் காப்பாளன் போலக் கூடவே சென்று கர்னல் அக்கினியூவின் பாராட்டுதலைப் பெற்றான். 'சிவகங்கை நாட்டைச் சேர்ந்த சில குடும்பங்கள் தொண்டைமான் நாட்டின் எல்லையிலிருந்த காடுகளில் ஒளிந்திருந்தன. அக்குடும்பத்தவர்களின் பட்டியல் ஒன்று தொண்டைமானுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் அனைவரையும் ஒரு நாள் இரவிலேயே கண்டு பிடித்தான் தீரன் தொண்டைமான், அவர்களைப் புரட்சி வீரர்களின் பக்கம் சேராதவாறு பாதுகாத்தான். “ஒரு சமயம் கர்னல் அக்கினியூவின் திட்டங்களை நிறைவேற்ற நான் ஒரு படையுடன் சிவகங்கைச் சீமைக்குள் நுழைந்து செல்ல வேண்டியிருந்தது. அப்போது எனக்குப் பெரும்படை தந்து பேருதவி அளித்தான் தொண்டைமான். தஞ்சைக் கலெக்டர் அனுப்பிய உணவுப் பொருள்களையும் திருச்சியிலிருந்து வந்த யுத்த தளவாடங்களையும் சேதமின்றி வெள்ளையர் முகாமில் சேர்க்க அவன் அரும்பாடு பட்டான். அடிக்கடி மிக முக்கியமான உளவுகள் பலவற்றைத் தொண்டைமான் எனக்குச் சொல்லி அனுப்பிய வண்ணம் இருந்தான். புரட்சி வீரர்களை வீழ்த்துவதற்குப் பெரிதும் பயன்பட்டன. அவ்வுளவுகள். அது குறித்து அக்கினியூவால் பெரிதும் பாராட்டப்பட்டான் தொண்டைமான். '1801 ஆம் ஆண்டு கவர்னர் பிரபுவான கிளைவினிடமிருந்து தொண்டைமானுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் வந்தது. தொண்டைமான் கிழக்கிந்தியக் கம்பெனிக்குச் செய்த சேவைகளையெல்லாம் அதில் அவர் புகழ்ந்திருந்தார். கர்னல் அக்கினியூவும் தொண்டைமானைப் பலபடப் பாராட்டினான். புதிய ராஜாவாகிய படமாத்தூர் உடையத்தேவனுக்குத் தொண்டைமானைப் பாதுகாக்க வேண்டுமென்று கம்பெனி அரசாங்கம்