பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 196 மருதிருவர் (1) கட்டபொம்மு சகோதரர்களின் உயிர்த்துணைவர்களான மருது பாண்டியரும் மக்களுடைய நினைவுக்குரியவர் ஆகிவிட்டனர். திரு. சஞ்சீவி எழுதிய மருதிருவர் என்ற அரிய நூல் அம்மாவீரர்களின் புகழைப் பரப்பி வருகிறது. - தமிழரசுக் கழகப் பொதுச் செயலாளர்கள் அறிக்கை (செங்கோல் 29-9-57) (இவ்வறிக்கையின் உண்மை மருது பாண்டியர் பெயரால் தோன்றும் மன்றங்களாலும் பேராசிரியர், டாக்டர் மு. ஆரோக்கியசாமி அவர்கள் எழுதியுள்ள நாம் இருக்கும் நாடு', 'தமிழ் நாட்டு வரலாறு போன்ற வரலாற்று நூல்களில் மருதுபாண்டியர் பெருமை சிறப்பிடம் பெற்றுள்ளமையாலும் வேறு பல வரலாற்று ஆசிரியர்களும் தம் நூல்களில் 'மருதிருவர் தரும் செய்திகளை ஏற்றுப் போற்றியுள்ளமையாலும் இனிது புலனாகும்). (2) 'மருதிருவர் என்னும் நூலில் பெரிய மருது, சின்ன மருது ஆகியோரின் வாழ்க்கைச் சிறப்புக்களைத் தக்க சான்றுகளோடு ந. சஞ்சீவி வீரம் செறிந்த நடையில் தந்திருக்கிறார். - வளரும் தமிழ் - சோ.ம.லெ, பக்.233 (3) மருது பாண்டியரின் உருவச்சிலை, சமாதி முதலியவற்றின் போட்டோப் படங்களும் பிற்சேர்க்கையாகச் சேர்க்கப்பட்ட ஆங்கிலக் குறிப்புகளும், இலக்கியப் பாடல்களும் ஆராய்ச்சியாளருக்குப் பெரிதும் பயன்படக் கூடியவை. -தினமணி (4) மறைந்து போன வரலாற்றைப் பல சரித்திர ஆதாரங்களைத் திரட்டி ஆராய்ச்சிக் கண் கொண்டு இந்நூலாசிரியர் எழுதியுள்ளார். - வீரகேசரி (இலங்கை)