பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 பேராசிரியர் ந.சஞ்சீவி இத்தகைய சூழ்நிலையிலேதான், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டியக் கட்டபொம்மன் தோன்றினான். அடிமை வாழ்வும் வஞ்சனைப் பேயும் கொடுங்கூத்தாடிய இக்காலத்திலேதான் அவனது அரசியல் வாழ்வும் தொடங்கியது. தொன்றுதொட்டு எவர்க்கும் தலை வணங்காது வாழ்ந்த தமிழ் மன்னர் மரபு ஆங்கில நாடோடிகளது நயவஞ்சகத்திற்கு இரையாகிக்கிடக்கும் கொடுமையைக் கண்டு அவன் உள்ளம் குமுறியது தங்கள் வாழ்விற்காகத் தமிழகத்தின் மானத்தையே குழி தோண்டிப் புதைக்கும் பாளையக்காரர்களின் சிறுமையை, கோழை நெஞ்சைக் கண்டு அவன் கண்கள் சிவந்தன. துப்பாக்கிக்கும் பீரங்கிக்கும் அஞ்சித் தமிழ் மக்களை அடிமைச்சிறையில் தள்ளும் குறுநில மன்னர்களின் துரோகச் செயல் கண்டு, அவன் வீர இரத்தம் தமிழ்க் குருதி - கொதித்தது! அதன் விளைவுதான்.