பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 24 அழுத கண்ணிரோடு ஐயனை - ஊமைத்துரையை இரு கைகளால் அனைத்து எடுத்துச் சென்று, தன் இல்லத்தில் வைத்துக் காப்பாற்றினாள் அத்தமிழ்த்தாய். அவள் திருவடிகளை வணங்குவோமாக! சாவின் வாயிலிருந்து தன்னை காத்த தொண்டு கிழவியின் அன்பாலும் அறிவாலும் எல்லா விபத்துகளிலிருந்தும் தப்பி, உடலும் உள்ளமும் தேறிய ஊமைத்துரை, அவ்வீரத்தாயின் திருவடிகளைத் தொட்டு வணங்கி, விடை பெற்றுக் கொண்டு, வாளும் கையுமாய்ப் புறப்பட்டான். அவன் கால்கள் மிக விரைவாய் நடந்தன. கை உடை வாளைப் பற்றிய வண்ணம் இருந்தது; அவன் இரு கண்களும் யாரோ இருவரை அக்கணமே காண விழைவன போலத் துடித்துக் கொண்டிருந்தன. யார் அவர்கள்?