பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 28 ஏகாதிபத்திய வெறி கொண்டு மருது சகோதரர்களைக் கொல்லக் காரணமாயிருந்தவனுமாகிய வெள்ளை மேஜர் வெல்ஷ் தன் புத்தகத்தில் எழுதிவைத்துவிட்டுப் போயிருப்பதைக் கீழே காணலாம். பெரிய மருதுவின் இத்தகைய வாழ்க்கை பாதுகாப்பு நிறைந்த நகர வாழ்க்கை வாழ்கிறவர்க்குப் பொருளற்றதாகவும் சோம்பேறித்தனம் நிறைந்ததாகவும் தோன்றும்; ஆனால், உண்மையில் அடர்ந்த காடுகள் செறிந்ததும், மக்களைக் கொன்று குவிக்கும் கொடிய விலங்குகள் நிறைந்ததுமான ஒரு நிலப்பகுதியில் பெரிய மருதுவின் இத்தகைய வீர வாழ்க்கை பெரும்பயன் நிறைந்து விளங்கியது. இவ்வாறு பெரிய மருதுவின் வீரஞ்செறிந்த வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டும் வெள்ளைக் கர்னல், தன் உள்ளத்தை ஒளிக்க முடியாமல், அவ்வீரனது பண்பார்ந்த உயரிய உள்ளம் பற்றிக் கூறும் உண்மையைப் பின் வரும் வரிகளால் அறியலாம்: பெரிய மருது என்னும் இக்கீழ்த்திசை நிம்ராடுவிடமிருந்து நான் 1795 ஆம் ஆண்டில் மதுரையில் மிக இளைய சுபேதார்களுள் ஒருவனாய் இருந்த போதே அன்பிற்கும் கவனிப்பிற்கும் சான்றாக எத்தனையோ அடையாளங்களைப் பெற்றிருக்கிறேன். ஆம். அது அவனது பெருந்தன்மையை நிறுவ நல்லதொரு சான்றாகும். இவ்வாறு தன் பகைவனாலும் போற்றப்படும் வீரமும் விழுமிய பண்பும் படைத்து வாழ்ந்த பெரிய மருது. இயற்கையாகவே இரக்கமும் கருணையும் நிறைந்தவனாய் விளங்கினான். அந்நாளில் தன் சீமையில் ராஜபாட்டைகளையும், கொடி வழிகளையும், நாடு நகரங்களையும் பயமுறுத்திக் கொள்ளை அடித்து வந்த கள்ளர் கூட்டத்திற்கு அவன் எமனாய் விளங்கினான்; அதே நேரத்தில் ஏழை குடிமக்களின் இன்னுயிர்த் தோழனாகவும் திகழ்ந்தான். மறவர் சீமை முழுவதிலும் தமிழ் மக்கள் உள்ளத்திலும் கோயில் கொண்ட நிகரற்ற வீரனாகவும் தலைவனாகவும் பெரிய மருது காட்சியளித்தான். 'மூத்தது மோழை இளையது காளை, என்பது பழந்தமிழ்ப் பழமொழி. ஆனால், மூத்தது காளையானால், இளையதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? சின்ன மருது கார் வண்ணன், ஆனாலும், கட்டழகன்; அண்ணனைப் போல அவ்வளவு பெரிய உருவமுடையவன் அல்லன். ஆயினும், எவர்க்கும் இளைக்காத தோற்றப் பொலிவு படைத்தவன். கம்பீரமான தோற்றம், சிரித்த முகம், எளிய கோலம், எவருடனும் கர்வம் இன்றிப் பழகும் கள்ளமற்ற சுபாவம் - இத்தகைய சிறப்புகள் யாவும் அமைந்தவன் சின்ன மருது. அண்ணனைக் காட்டிலும் உலகியல் அறிவிலும் ராசதந்திரத்திலும் வல்லவனாய் விளங்கினான் சின்ன மருது. காட்சிக்கு எளியனாய்,