பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 54 கொடுத்துவிட்டார்களே! என்று எண்ணிக் கலங்கினர். எனினும், அவ்விடுதலை வீரர்கள் நெஞ்சம் கலங்கினாலும், முற்றிலும் சோர்ந்துவிடவில்லை; காளையார் கோவிலுக்குள் நுழைந்த அயலார் படையை ஆன மட்டும் ஒரு கை பார்ப்பது என்ற உறுதியோடு துள்ளி எழுந்தனர் எழுக படை முழங்குக முரசம் தாக்குக பரங்கிப் படையை' என்று வாளுருவி ஆணை பிறப்பித்தனர். பெரும்போர் குமுறி எழுந்தது. அக்டோபர் மாதம் முதல் நாளன்று காலை 11 மணிக்குக் காளையார் கோவிலுக்குள் நுழைந்த கம்பெனிப்படைகள் கனல் வாய்ப் பீரங்கிகளைத் திறந்துவிட்டன. சுமார் இரண்டு மணி நேரம் ஒரே வெடி முழக்கம் - கடல் ஒலியை அடக்கும் பெருமுழக்கம் பீரங்கியாலும் துப்பாக்கியாலும் சுட்ட வண்ணம் இருந்தனர். ஊரெங்கும் இரத்தப் பெருக்கு பிணக்குவியல் பயங்கர அலறல் கணக்கற்ற உயிர்கள் இவ்வுலகைத் துறந்தன. மாட மாளிகைகள் மண்ணாயின. எங்கும் புகை மண்டலம் இருள் அழிவு "ஐயோ ஐயோ!' என்ற ஒலம். அந்தோ அன்று நடந்த போரில் காளையார் கோவில் பாழடைந்தே போய் விட்டது. அந்த அழிவின் அடையாளங்கள் இன்றும் காட்சி தருகின்றன. இக்கடும்போர் நடந்த அன்று இரவு காளையார் கோவிலை அடுத்துள்ள காளையார் மங்கலத்தில் மருது பாண்டியரும் ஊமைத்துரையும் நடுக்காட்டில் நள்ளிரவில் கூடினர். அவர்களைச் சுற்றி நின்றது ஒரு பெரும் படை நெடுந்தொலைவில் திசைகள் எட்டிலும் தீவர்த்தியோடு வாளும் கையுமாய் வீரர்கள் காவல் காத்து நின்றார்கள். அவர்கள் கையில் இருந்த தீயும் கண்களில் இருந்த நெருப்பும் ஒரே தன்மையாய்த்தான் இருந்தன. விடுதலைப்படை சூழ்ந்திருக்க, எழுந்தான் ஊமைத்துரை. அவன் வாய் பேசவில்லை; கை விரல்களே பேசின. அந்த பேசாப் பேச்சை விழித்த கண் இமையாது பார்த்திருந்த வீரர்களுடைய கண்களில் தீப்பொறி பறந்தது. அவர்கள் அடிக்கடி கையை நிலத்தின் மேல் அறைந்து சபதம் செய்தார்கள். அப்படி என்ன ஊமைத்துரை உணர்த்தினான் தன் சாடை மொழியால்? மானம் உள்ள தமிழ் மறவர்களே, நம் எண்ணிக்கை குறைந்துவிட்டது; படைப்பலம் குன்றிவிட்டது. நம் ஊரும் கோட்டையும் அயலார் கையிற் சிக்கின. ஆனாலும், உயிருள்ள வரை போராடியே தீருவோம் மானங்கெட்டு ஒரு வினாடியும் வாழ மாட்டோம்; சில ஊர்களும் சில கோட்டைகளும் போனால் என்ன? தமிழ் நாட்டில் எஞ்சியிருக்கும் கோட்டைக்குள் புகுவோம். சிதைந்து விட்ட மறவர் சீமையில் ஒற்றுமைச் சங்கு ஊதுவோம். இதோ! என் கையில் இருக்கும் இந்தத் துரும்பை நசுக்கி ஊதி எறிவது போலக் கம்பெனித் துருப்புகளைக் கசக்கி எறிவோம். தமிழ் நாட்டிலிருந்து பரங்கியரை வெளியேற்றுவோம் வெற்றி - இல்லையேல் சாவு இதுவே அவ்வீரப் பெருமகன் பேசிய பேச்சு கேட்டிருந்த-அல்ல கண்டிருந்த மறவர்