பக்கம்:மானங்காத்த மருதுபாண்டியர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மானங்காத்த மருதுபாண்டியர் 68 பிறப்பாளார்களுடைய திருவுருவங்களை அழகும் ஆண்மையும் ஒளிரச் செதுக்கி வைத்துள்ளார்கள். இத்திருவுருவங்களைத் தெய்வச் சிலைகட்கு இணையாகக் கருதி நம் முன்னோர்கள் கோவில்களிலேயே இவற்றுக்கு இடம் அளித்த அருமைப்பாட்டை என்னென்று போற்றுவது ஆம்! உண்மையான நாட்டுப் பற்றும் உயர்வான தெய்வப் பற்றும் வேறு வேறானவை அல்லவே! இவ்வுண்மையை நம் மக்களும் அரசும் நன்குணர்ந்து போற்றுவதோடு சிலை வடிவில் நிற்கும் அச்செந்தமிழ் வீரர்கள் பெயரால் நாடெங்கும் மக்கட்குப் பல வகையான பயனுடைய நினைவு நிலையங்களை நிறுவ வேண்டும். இவ்வாறெல்லாம் செய்ய வேண்டுவது நம் கடமை மட்டுமன்று; கொள்கைக்காக உயிர் கொடுக்கும் வீரர்களைத் தெய்வமெனக் கருதி வழிபடும் தீந்தமிழ்ப் பண்பாடும் இதுவேயாகும். இடைக்காலத்தில் இப்பண்பாடு பழுதுபட்டது. வீர வழிபாடு தொலைந்து வெற்று வழிபாடுகள் பல்கின. அதனால், வழிபாட்டின் பயனே பாழாகியது. இந்நிலை மாறுங்காலம் நாட்டின் வளர்ச்சியும் வாழ்வும் ஆயிரம் மடங்காக ஓங்கி மேன்மை அடையும் ஒப்பற்ற காலமாகும். இந்தியாவை - தமிழகத்தை - அடக்கி ஆளவந்த ஆணவம் மிக்க ஆங்கிலக் கொள்ளைக் கூட்டத்தை ஆரம்ப நாளிலேயே ஆவேசத்துடனும் ஆண்மையுடனும் எதிர்த்து, இருபத்தைந்து மாதங்கள் இடைவிடாது போரிட்டு மடிந்த எண்ணற்ற வீரர்களை ஈன்றெடுத்த பெருமை தமிழ் மண்ணிற்கே உள்ள தனியுரிமையாகும். அவ்வீரப் போரைத் தொடர்ந்து நடத்திய பெருமை. இந்திய மக்களுக்கு இளைஞர்கட்கு உண்டெனினும், அப்போரைத் தொடங்கி வைத்துத் தலைமை தாங்கிய பெருமை தமிழகத்தின் மன்னர்கட்கே உண்டு. ஆம் இந்திய விடுதலைப் போரை நாட்டின் மானங்காக்கும் ஆண்மைப் போரை - தொடங்கி வைத்த முதல் இந்திய இனம் தமிழ் இனமே ஆகும் - அப்போரில் மூண்டெழுந்த தியாகத் தீயில் குதித்துச் சிறைப்பட்டும், குண்டுக்கும் பீரங்கிக்கும் இரையாகியும், துக்கு மேடைகளில் தொங்கியும், தீவாந்தரத் தண்டனைகளைப் பெற்றும் அவதிப்பட்ட முதல் இனம் தமிழ் இனமே! அத்தகைய வீரத்தமிழ் இனம் தந்த இணையில்லா இரு மாணிக்கங்களைப் பற்றியே சிறப்பாக இப்புத்தகத்தில் படித்தோம். மருது உடன் பிறப்பாளர்கள் நம் தாய் நாட்டின் மானங்காத்த மாண்பு மிக்க வீரர்கள். தமிழ்ச் சாதியின் விடுதலை வேட்கையையும் தியாக வெற்றியையும் மலைமேல் இட்ட மங்காச் சுடர் விளக்காகச் செய்த புகழுடையோர்கள். இதந்தரு மனையி னிங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் பதந்திரு விரண்டு மாறிப் பழிமிகுந் திழிவுற் றாலும்