பக்கம்:விந்தன் கதைகள் 1.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

விந்தன் கதைகள்

போடப் பார்க்கலாம்; அவ்வளவுதான் இப்பொழுது சொல்லுங்கள்; விதி வென்றதா?”

இந்தச் சமயத்தில் “இல்லை, சாமி! வென்றது உங்க முயற்சி தானே?” என்று எங்கிருந்தோ ஒரு குரல் கேட்டது.

எல்லோரும் சத்தம் வந்த திக்கை நோக்கித் திரும்பினர். பட்டணத்திலிருந்து ரவி வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு ஓடோடியும் வந்த சுப்பன், ஆனந்தப் பரவசத்தோடு அவர்களுடைய காலடியில் வீழ்ந்து வணங்கினான்.