பக்கம்:விளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை


தமிழ் இலக்கியத்திற்கு விளையாட்டுத்துறை என்பது ஒரு புதிய


துறை.


உலகம் முழுவதும் உற்சாகமாக ஆடிக்கொண்டிருக்கும் ஒப்பற்ற விளையாட்டுக்களை எல்லாம், காலங்காலமாக தமிழ் மக்கள் விளையாடிவருகின்றார்கள் என்றாலும், தமிழ் இலக்கியநயத்தோடும் சிறப்போடும் கூடிய விளையாட்டுத் துறை நூல்கள் இதுகாறும் எழுதப்படாமல் இருந்தது ஒரு பெருங் குறையாகவே இருந்து வந்தது.


இந்தப் புதிய துறையில் நூல்களை எழுதி, அச்சிட்டு, பதிப்பித்து, விற்பனையும் செய்கின்ற ஒரு புதிய முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு இன்றோடு இருபது ஆண்டுகளாகின்றன.


எத்தனையோ விளையாட்டுத்துறை நூல்களை எழுதினாலும், ‘எல்லாம் தமிழில் இருக்க வேண்டும் என்கிற கொள்கைக்கு ஏற்ப, விளையாட்டுத் துறை பற்றிய அகராதி ஒன்றினை எழுதி வெளியிட வேண்டும் என்ற ஓர் ஏக்கம் என்னுள்ளே இத்தனை நாளும் இருந்து கொண்டேதான் இருந்தது. -


கனவாகவும் நினைவாகவும் என்னுள்ளத்தே இருந்து கொண்டு, என்னை பந்தாடிக்கொண்டிருந்த சிந்தனைச் சுமையினை, இன்று இத்தகைய ஒரு புதிய அகராதியாக உங்களிடம் இறக்கி வைத்திருக்கிறேன். -


தமிழிலே விளையாட்டுக்கள் பற்றி விளக்கியே பேச முடியாது என்ற காலக் கட்டத்திலே, தமிழிலே எளிமையாக எழுத முடியும் என்று எண்ணித் துணிந்த எனது முயற்சிகள் இனிமையான வெற்றியை அளித்ததன் காரணமாக, இன்று நூற்றுக்கு மேற்பட்ட நூல்களையும் என்னால் எழுத முடிந்திருக்கிறது.


புதிய முயற்சியான இந்த விளையாட்டுத்துறை ஆங்கிலம் தமிழ்


அகராதியை, மிகவும் அரிதின் முயன்று உழைத்து, உருவாக்கியிருக் கிறேன்.