பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 கல்தேரின் சக்கரங்கள் எல்லாம் இன்றும் உருளுகின்றன. தேரின் மேல் விதானம் செங்கல்லில் கட்டப்பட்டு பின்னர் சிதைந்திருக்கிறது. பல கற்களைச் செதுக்கியே இந்தக் கல்தேரை அமைத்திருக்கிறார்கள் என்றாலும், ஒட்டுப் போட்ட இடங்களே தெரியாத வண்ணம் அமைத் திருப்பதால் ஒரே கல்லில் அமைத்த தேர்தானோ என்று சந்தேகிக்கும்படிச் செய்திருக்கிறார்கள் சிற்பிகள். ஹம்பி யில் எதைப் பார்த்தாலும் பார்க்கா விட்டாலும் விட்டலர் கோயிலையும் இக்கல்த் தேரையும் காணாமல் திரும்புதல் கடிடாது. - இந்தக் கோயிலிருந்து கிழக்கே வந்து தெற்கே திரும்ப வேண்டும். வழியில் தாளரி கட்டு என்ற வாயிலையும் கடக்க வேண்டும். அதுதான் விஜயநகரத்தின் வடக்கு வாயில். அதற்கு கிழக்கேதான் நிம்பபுரம் இருக்கிறது. அங்குதான் வாலி சுக்கிரீவர் சண்டை நடந்திருக்கிறது. அப்பக்கத்தில் கிடக்கும் கற்களை வாலியின் எலும்புகள் என்றும் கூறுகின்றனர். இனி தெற்கே நோக்கி செல்கின்ற பாதையில் கொஞ்சம் விரைவாகவே செல்லலாம். அப்படிச் சென்று பெல்லாரி செல்லும் பாதைக்குத் தென்புறம் உள்ள கமலாபுரத்தில் உள்ள பட்டா பிராமன் கோயிலையும் பார்க்கலாம். நன்றாகக் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயிலைப் பார்த்தபின் கொஞ்சம் ஓய்வு வேண்டு மென்றால் பக்கத்தில் உள்ள முசாபரி பங்களாவில் தங்கி ஒய்வெடுத்துக் கொள்ளலாம், அதன் பின் திரும்பவும் வடக்கு நோக்கித் திரும்பலாம். இந்த வழியில்தான் அரசியர் தங்கும் அந்தப்புரங்கள் இருந்திருக்கின்றன. அந்தப்புரமாதர் நீராடும் நீராழி மண்டபம் மிகவும் அழகாக இருக்கிறது. அதற்குப் பக்கத்திலே சந்திர சேகருக்கு ஒரு கோயில் இருக்கிறது. இங்குதான் அந்தப் பிரபலமான கமலமஹால் இருக்கிறது. இந்த கமலமஹால், ஏதோ தாமரை மலர் விரிந்திருப்பது போல் கட்டப்பட்ட கட்டிடம்-பலப்பல கோணங்கள் கொண்டது. ஒரு மாடி