பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நின்று கொண்டிருக்கும் இவைகளை எல்லாம் பார்த்து விட்டே கோயில் முன் மண்டபம் வரவேணும். அந்த மண்டபம் விசாலமான மண்டபம் அதனை ஏந்தி நிற்கும் துரண்கள் எல்லாம் கடைசல் பிடித்த கருங்காலி மரத்தால் செய்யப்பட்டவையோ என்று சொல்லும்படி பள பள என்று இருக்கும். கொஞ்சம் நெருங்கி அந்தத் துரண்களைத் தட்டிப் பார்த்தால் அவை மரத்தால் செய்யப்பட்டவை அல்ல, நல்ல கருங்கல்லால் ஆனவை என்றே தோன்றும். கல்லையா இப்படி பளபளக்க வைத்திருக்கிறார்கள் சிற்பிகள் என்று அதிசயித்து நிற்போம். மண்டபத்தின் அழகையும் அந்த மண்டபத்தின் விளிம்புகளில் உள்ள கொடுங்கைகளையும் அதில் உள்ள சிற்ப வேலைகளையும் கண்டு மகிழ்ந்த பின் மேலும் நடந்தால் கருவறை வாயில் வந்து சேருவோம். அங்கிருந்து ஹரிஹரேஸ்வரனைத் தரிசிக்கலாம். அந்த ஹரிஹரன் நாலடி உயரமே உள்ள சிலா வடிவம். அரையில் ஒரு பட்டுக் கரை வேட்டியும் மேலே ஒரு ஷர்ட்டும் அணிந்து கொண்டு நவநாகரீக புருஷனாய் அவர் காட்சி தருவார். இந்த ஹரிஹர வடிவம், நமது தமிழ் நாட்டு சங்கர நாராயணனது வடிவம் போன்றதே. இடபக்கம் ஹரியாகவும், வலப்பக்கம் ஹரனாகவும் இருக்கும். கீரீடமும் சடாமகுடமும் தலையை அலங்கரிக்கும். நான்கு திருக்கரங்களில் இடப் பக்கம் உள்ள கரத்தில் சங்கு சக்கரமும், வலப்பக்கம் உள்ள கரத்தில் திரிசூலமும் உருத்திராக்கமும் இருக்கும். இரண்டு கைகள் நீண்டு உயர்ந்திருந்தால் இரண்டு கைகள் பக்க 悲_Q)島f)訂"改恋 அமைந்திருக்கும். இரண்டு பீடத்தின் மேல் த ங் கி யி ரு க் கு ம் . அந்த பீடத்தில் ஒரு பக்கத்தில் பார்வதியும் க ண ப தியு ம் இரு ப் ப ர் . மற்றொரு பக்கத்தில் லட்சுமியும் ரிஷ்ய சிருங்கரும் இருப்பர். சங்கரன் கோயிலில் உள்ள சங்கரநாராயணன் பக்கத்தில் இப்படி பார்வதி, லட்சுமி எல்லாம் இருப்ப தில்லை. இத்தனையையும் பார்த்தபின், ஹரிஹரேஸ் வரனின் திருவடி தரிசனம் காணவிழைவோம். காலையும்,