பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 லட்சுமியும் சரஸ்வதியும் இருக்கின்றனர். தேவியர் மூவரும் சேர்ந்திருக்கும் கோலம்தானே அன்னைபராசக்தியின் கோலம் அந்தத் தேவியரையும் வணங்கிய பின்பே திரும்பலாம். இந்த ஹரிஹரேஸ்வரரது கோயிலை ஹொய்சல, மன்னான இரண்டாம் நரசிம்மனின் சேனாதிபதியான போலால்வா என்பவர் 1228-ம் வருஷம் கட்டினான் என்று சரித்திர ஏடுகள் சொல்கின்றன. சரித்திர ஏடுகள் சொல்வானேன். கோயிலின் முன் மண்டபத்தில் உள்ள துரண்களே இந்தக் கோயில் ஹொய்சலர் திருப்பணிகள் என்று பறை அறைகிறதே. பின்னர் 16-ம் நூற்றாண்டில் விஜயநகர் சாம்ராஜ்யத்தை ஆண்ட நாயக்க மன்னர்கள் இக்கோயிலுக்கு பல நிபந்தங்கள் ஏற்படுத்தி கோயிலைப் பாதுகாத்து வந்திருக்கின்றனர். விஜயநகர் சாம்ராஜ்யத்தை உருவாக்கும் பணியில் முனைந்து நின்ற ஹக்கா என்ற மன்னன் இந்த ஹரிஹரனிடத்தில் அத்யந்த பிரியம் உடையவனாக இருந்திருக்கின்றார். அதனால் தான் பெயரையே ஹரிஹர நாராயணன் என்று மாற்றிக் கொண் டிருக்கிறார். அத்தனன பக்தி அந்த ஹரிஹரனிடம் அவனுக்கு. நாமும் அந்த ஹரிஹரனை வந்தித்து வணங்கி விட்டு நமது யாத்திரையைத் தொடரலாம்.