பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 போயிருக்கிறது. எப்படி ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் பெருமை எல்லாம் ஒரு தலைநகரிலே அடங்கிக் கிடந்திருக் கிறது. அது எப்படி அழிந்துப் போயிருக்கிறது என்று தெரிய நாம் அந்த மறைந்த மாநகரமாகிய ஹம்பி என்ற இடத்திற்குச் செல்ல வேணும். அந்த ஹம்பிக்கே செல்கிறோம் நாம் இன்று. ஹம்பி செல்ல, சென்னையிலிருந்து பம்பாய் செல்லும் ரயிலில் ஏறவேண்டும். குண்டக்கல் ஜங்ஷனில் இறங்கி அங்கிருந்து ஹாப்ளி செல்லும் ரயில் ஏறி ஹாஸ்பெட் என்ற ஸ் டே ஷ னி ல் இறங்கவேண்டும். அந்த ஹாஸ்பெட் ஸ்டேஷனிலிருந்து பெல்லாரி .ெ ச ல் லு ம் பாதையில் காரிலோ, பஸ்ஸிலோ இல்லை ஜட்கா வண்டியிலோ எட்டு மைல் கிழக்கு நோக்கிச் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் ஹம்பி என்று வழங்கும் அந்த பழைய விஜய நகர சாம்ராஜ்யத்தின் தலைநகருக்கு வந்து சேருவோம். ஹம்பி சென்று அங்குள்ள பிரதான கோயிலில் இருக்கும் விரூபாrரை வணங்கும் முன் வழியில் உள்ளதை எல்லாம் பார்த்துவிட வேண்டாமா. சரி, நானும் உங்களை மெல்ல மெல்ல இட்டுச் சென்று எல்லா இடங்களையும் காட்டி விடுகிறது என்ற சங்கல்பத்துடனே தானே புறப்பட்டிருக் கிறேன். அவசரம் இல்லாமல் கொஞ்சம் மெதுவாகவே போகலாம். இதற்கெல்லாம் சொந்தக் கார் இருந்தால் மிக மிக நல்லது. இல்லாவிட்டால் ஹாஸ்பெட்டில் நல்லதொரு டாக்சியை ஏற்பாடு செய்து கொள்ளலாம், ஹாஸ்பெட் என்றாலே கன்னடத்தில் புதிய பட்டணம் என்றுதான் பொருள். ஹாஸ்பெட் அப்படி ஒன்றும் புதியதொரு பட்டணமாக இல்லை.அந்தக்காலத்தில் அதற்கு திருமலை தேவியர் பட்டணம் என்றுதான் பெயர் இருந்திருக்கிறது. விஜயநகர் மன்னர்களில் தலை சிறந்தவராகவும், அந்த சாம்ராஜ்யத்தை மகோன்னத நிலைக்குக் கொண்டு வந்த வருமான கிருஷ்ணதேவராயர் நிர்மாணித்தப் பட்டணம் அது. தன்னுடைய இரண்டாவது மனைவியான திருமலை