பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 வடக்கே சென்ருல் கார் ஒரு பெரிய பள்ளத்தில் இறங்கி ஏறும். அதன் பின் ஹம்பியின் பஜார் வீதியில் மேற்கு நோக்கிச் சென்ருல் அங்குள்ள பிரதான கோயிலான விருபாக்ஷர் கோயில் வாயிலுக்கு வந்து சேருவோம். அந்தக் கோயில் வாயிலுக்குக் கிழக்கே தமிழ் நாட்டுக் கோயில்களில் உள்ளது போன்று மரத்தாலாகிய தேர் இரண்டு நிற்கும். இந்தக் கோயிலின் விழாவே சித்திரா பவுர்ணமியில் நடக்கும் ரதோத்சவம்தான். அதைக் காண ஆயிரக்கணக்கான தமிழர்களும் ஆந்திரர்களும் வருவதாகச் சொல்கின்றனர். கோயில் வாயிலை 65 அடி உயரமுள்ள கோபுரம். ஒன்று அ ரிை .ெ ச ய் யு ம். அக்கோபுரத்தில் பதினொரு மாடங்கள் இருக்கின்றன. கோயில் சுவர்களில் எல்லாம் சிற்ப வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இக்கோயில் வாயிலைக் கடந்ததும் ஒரு பெரிய திறந்த வெளி முற்றம் வந்து சேருவோம். அங்கெல்லாம் பல குடில்கள் இருக்கும். அதில் கோயில் ஊழியர்களும் யாத்திரீகர்களும் தங்கியிருப்பர். இவற்றையும் இடை நிலை கோபுரத்தையும் கடந்துதான் அடுத்த பிரகாரத் துக்கு வரவேண்டும். அங்கு ஒரு மண்டபம். அதுவே ரங்க மண்டபம், சிறந்த வேலைப்பாடுடைய துரண்கள் அந்தரங்க மண்டபத்தைத் தாங்கி நிற்கும். அதையும் கடந்து மூலக் கோயிலுக்குச் செல்ல வேண்டும். கீழ்ப்பக்கத்து வாயில் வழி யாக உள்ளே செல்ல அனுமதிக்கமாட்டார்கள். ஆதலால் வடபக்கத்து வாயில் வழியாகத்தான் செல்லவேண்டும். கோயிலின் கருவறையிலே விரூபாrர் சிவலிங்க வடிவிலே இருக்கிறார். அவரையே பம்பாபதி என்கிறார்கள். பம்பை என்பது துங்க பத்ரையின் பழைய பெயர். கம்பன் பாடு கிறானே பம்பைப் பொய்கையைப்பற்றி. துங்கபத்ரையின் கரையில் இக்கோயில் இருப்பதால் பம்பாபதி என்ற பெயர் பொருத்தமானதுதான். இந்தப் பம்பாபதியைப் பற்றி ஒரு கதையும் வழங்குகிறது. பக்கத்தில் உள்ள ஹேமகூடம் என்னும் பர்வதத்தில் உள்ள முனியுங்கவர்களுக்கு கன்னிப் பெண்ணுெருத்தி புஷ்பப் பணிவிடை செய்து வந்திருக்