பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129 யிருக்கின்றனர், அந்தக்காலத்தில் இன்று அங்கு இருப்பவை ஒரு சில கற்பாறைகள். கிட்டத்தட்ட ஏழு எட்டு மைல் இழுத்து அடித்து விட் டீரோ இன்னும் எவ்வளவு தூரம் தான் இழுத்தடிக்கப் போகிறீர் என்று நீங்கள் இப்போது முணுமுணுப்பது என் காதில் கேட்கிறது. நான் என்ன செய்ய ஹம்பியில் கால் வாசிதானே பார்த்திருக்கிறோம் இனித்தானே விட்டவர் கோயில் ஹஸ்ரே ராமர் கோயில் தசாரதிப்பா, உக்ர நரசிம்மர் போன்ற இடங்களுக்குப் போக வேண்டும். அவைகளுக்கு இன்று உங்களை இழுத்தடிக்க விரும்ப வில்லை. கட்டுச்சோறோ அல்லது ஹாஸ்பட்டிலிருந்து ஏதாவது சிற்றுண்டி மூட்டையோ கொண்டு வந்திருந்தால் அவற்றை இந்த துங்கபத்ரை ஆற்றின் கரையிலேயோ பாறைகளிலோ உட்கார்ந்து அருந்திவிட்டு, கொஞ்சம் சிரமப் பரிகாரம் செய்து கொண்டு வாதாபி மழகளிறு, கோயிலுக்குஅடுத்துப் போவோம். என்ன சரிதானே.