பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 என்று அன்று மணிவாசகர் பாடினாரே, அந்தப் பாடலுக்கு "கற்ப அம்மையப்பனாக இறைவன் அங்கு சேவை சாதிப் பான். இங்குள்ள அர்த்தநாரி வீணை ஏந்திய கையனாய் நிற்பது புதுமையானது. வடபுறம் நந்தி, பிருங்கி முனிவரும் நிற்பர். இடப்புறம் அன்னை பார்வதியின் தோழி ஒருத்தி நிற்பாள். மிக்க அழகான இந்த மாதிருக்கும் பாதியனை வணங்கிவிட்டு கிழக்கே திரும்பினால் மேற்கு நோக்கிய வராய் ஹரிஹரமூர்த்தி நிற்பார். வலதுகையில் மழுவும் இடது கையில் சங்கும் ஏந்தியவராய் பார்வதி, லக்ஷ்மி சகிதம் எழுந்தருளியிருக்கும் இச்சங்கர நாராயணன் மிகவும் கம்பீரமான வடிவினர். இன்னும் இக் குடைவரையில் மகிஷமர்த்தனியும், உருண்டு திரண்ட வடிவோடு சூலம் ஏந்திய கையளாய் நிற்பாள். எல்லோரும் அர்த்த சித்திர வடிவிலே (Bas relief) இருப்பவர்தாம். கருவறையிலே லிங்க வடிவிலே இறைவன் இருக்கிறான். இங்குள்ள உள் மண்டப வாயிலின் துரண்கள் எல்லாம் அடிப்பாகம் சமசதுரம் உடையவையாகவும் மேல்பாகம் வரிவரியாய் வடித்தெடுத்த கமலம் போலவும் அமைந்திருக்கும். வேறுவடிவங்கள் இத் துரண்களில் செதுக்கப்படவில்லை. இக்குடைவரையிலிருந்து வெளியே வந்து கீழ்புறம் உள்ள ஐந்தாறுபடிகள் ஏறிச் சென்றால், இரண்டாவது குடைவரை வந்து சேருவோம். இது முதல் குடைவரையை விடப் பெரியது. இங்கு வாயிலில் இரண்டு துவார பாலகர்கள் நிற்கின்றனர். இ ங் கு திரிவிக்கிரமனும், வராகரும் பெரிய பெரிய உருவில் இருக்கின்றனர். உள் மண்டபத்தின் விதானத்தில் கருடன் மேல் ஆரோகணித்து வரும் வி ஷ் ணு ைவ பார்ப்பதுடன் ஒரு மலர்ந்த தாமரையையுமே பார்க்கலாம். உற்று நோக்கினால், அது தாமரை அல்ல என்றும், பதினாறு மீன்களைச் செதுக்கித் தாமரை போல அமைத்திருக்கிறார்கள் என்றும் தெரியும். இங்குள்ள குடைவரையில் எல்லாம் அளவில் பெரியது மூன்றாவது குடைவரைதான். இக்குடைவரை மலையில்