பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

149 பிரிவுகளுக்குள் அடங்கும். அவை நாகரம், வேசரம், திராவிடம் என்பன. இவற்றில் நாகரம் என்பதுதான் வட இந்தியக் கட்டிடக் கலை. இவை பெரும்பாலும் நரு மதைக்கு வடக்கேதான் காணப்படுகின்றன. அடிமுதல் முடிவரையில் நான்கு பட்டை சதுரமாக அமைக்கப் படுவது. வேசரம் என்னும் கட்டிட வகை தரை அமைப் பிலும், கட்டிட அமைப்பிலும் விமான அமைப்பிலும் வட்ட வடிவமாக அல்லது நீண்ட அரைவட்ட வடிவமாக இருக்கும். தமிழ் நாட்டுக் கட்டிட முறைதான் திராவிட முறையாகும். தமிழ் நாட்டில் வேசர முறையில் கட்டப் பட்ட கோயில்கள் ஒரு சில உண்டு என்றாலும் நாகர முறையில் கட்டப்பட்ட கோயில்கள் இல்லை என்று. ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தப் பட்டடக்கல் கோயில்களில் சில நாகரமுறை கட்டிடக் கலை அமைப்பில் இருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது. இங்குதான் திராவிட முறையும், நாகர முறையும் கலந்து உறவாடி தேசிய ஒருமைப்பாட்டை உருவாக்கியிருக்கிறது. இந்த காசி விஸ்வேசர் கோயில் மூலவர் நல்ல கருங்கல் வடிவினர். லிங்க உருவில் இருப்பவர். முன் மண்டபத்தில் துரண்களில் எல்லாம் சிறந்த சிற்ப வேலைப்பாடுகள் இருக்கிறது. இக்கோயிலை அடுத்தே கமலநாதர் கோயில் இருக்கிறது. இக்கோயில் நாகர பாணியில் கட்டப்பட்ட பெரியதொரு கோயில். இங்கும் சிவலிங்கமே கமலநாதர் என்ற பெயரில் பிரதிஷ்டை ஆகி இருக்கிறார். கோயில் வாயிலும், மண்டபங்கள் சிற்ப வடிவங்கள் பலவற்றைத். தாங்கி நிற்கின்றன. இன்னும் இங்கு காண வேண்டியவை சங்கமேஸ்வரர் கோயில், சந்திரசேகரர் கோயில், ஜம்புலிங்கர் கோயில் காட சித்தேஸ்வரர் கோயில்கள்தாம். எல்லாம் ஒன்று. போல் ஒன்றாக அமைக்கப்பட்டவையே. தனிச் சிறப்பு உடையன அல்ல. சங்கமேஸ்வரர் கோயில் விமானம், மூன்றடுக்கு மாடி உடையது. நல்ல திராவிட சிற்ப பாணி.