பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 இந்த துர்க்கை கோயிலுக்கு அடுத்தபடி நாம் கான வேண்டியது ஹச்சப்பையா கோயில். இது துர்க்கை கோயிலைப் போல் பெரிய கோயில் அல்ல. இக் கோயிலிலும் ஒரு சிறு முன் மண்டபம் இருக்கிறது. சிகரம்: கலசம் இல்லாது மொட்டையாகவே நிற்கிறது. இங்கு பிரம்மா ஒருவரும் கஜலக்ஷ்மியும் சிற்ப வடிவங்களாக இருக்கிறார்கள். இருவரில் கஜலக்ஷ்மி தான் கொஞ்சம் கலை அழகு உடையவளாக இருக்கிறாள். கோயில் விதானத்தில் மயில்மேல் ஆரோகணித்து வரும் கார்த்தி கேயனது போர்க்கோலம் உருவாகியிருக்கிறது. எல்லாமே அர்த்தசித்திர (Eas Relief) வடிவங்கள்தாம். சின்ன ஹச்சிமல்லிகுடி என்று ஒரு கோயில் அதுவும் பெரிய கோயில் அல்ல. முன் மண்டபத்திற்கு ஏறவே பத்துப் பன்னிரண்டு படிகள் ஏறவேண்டும். இங்குள்ள தூண்கள், சுவர்களில் சிற்ப வடிவங்கள் இல்லை. இக்கோயிலின் சிகரம் பிந்திய காலத்தில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும் போலும், அதுவும் இன்று மொட்டையாகவே இருக்கிறது. இத்தனை கோயில்களோடு கோயிலாக ஒரு சமணக் கோயிலும் உருவாகி இருக்கிறது. அதனையே மேற்குடி சமனக் கோயில் என்கின்றனர். இவ்வட்டாரத்தில் உருவான கடைசி கோயில் இதுதானாம். இது 634-ல் கட்டி இருக்கிறார்கள், சில பகுதிகள் முற்று பெறாமலே நின்றிருக்கின்றன, என்றாலும் மற்ற கோயில்களை விட திறமையான முறையில் கட்டப்பட்ட கோயில் இதுதான். ஆம். ஆண்டுகள் செல்லச் செல்ல அனுபவம் வளர வளர திறமையும் அதிகரிக்கத்தானே செய்யும். இனி, இந்தக் கோயில்களையே சுற்றிக் கொண்டிருக்க வேண்டாம். இங்குள்ள குடைவரைக் கோயில்கள் இரண்டு பிரசித்தமானவை ஆயிற்றே. அவற்றையும் பார்த்து விட்டுத் திரும்புவோம். அவற்றில் ஒன்றுதான் ராவண