பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மையைக் காக்க ராமன் தன் துனைவி சீதையுடனும், தம் பி லட்சுமணனுடனும் காணகம் புறப்படுகின்றான். சித்திர கூடத்தில் சில நாள் தங்கி இருந்துவிட்டு தண்டகாரண்யத் தில் புகுந்து, அகத்திய முனிவரால் ராமன் தங்கித் தவம் புரிவதற்கு ஏற்ற இடம் என்று சொல்லப்பட்ட பஞ்சவடி வந்து ஒரு பர்ணசாலை அமைத்துக்கொண்டு வாழ் கின்றான். அங்கு வருகிறாள் தசமுகன் தங்கையாகிய சூர்ப்பனகை. ராமனது அழகைக்கண்டு மோகித்து அவன் முன்னர் காமவல்லியாக கன்னி உருவில் தோன்றித் தன்னை மணந்து கொள்ள வேண்டுகிறாள். ஏகபத்தினி விரதனான ராமன், அவளை ஏற்றுக்கொள்ள மறுக்கிருன். சீதை என்று ஒருத்தி இருப்பதால்தான் தன்னை ஏற்க மறுக்கிறார் என்று நினைத்த சூர்ப்பனகை, அந்தச் சீதையையே எடுத்துச் சென்று தொலைத்துக்கட்ட நினைக்கிறாள். அவள் சீதயைத் துக்க முனைகிறபோது இலக்குவன் இடை புகுந்து இலங்கு வாளால் அவன் மூக்கை அரிந்து விடுகிறான். இதனைக் கம்பன் அழகாகப் பாடுகிறான். மூக்கும் காதும் வெம்முதால் முலைக்கண்களும் முறையால் போக்கி, போக்கிய சினத்தொடும் புரிகுழல் விட்டான் என்பதே அவனது பாட்டு. அப்படி சூர்ப்பனகையின் நாசி அறுபட்ட இடமே நாசிக் என்று அன்று முதல் வழங்கி வரு கிறது. இந்த தலத்தைப் பழைய புராணங்களில் ஹரிஹர rேத்திரம் என்றும், பத்மநகரம் என்றும் திரிகண்டகம் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. மொகலாய சக்கர வர்த்தி அவுரங்சீப் இந்த தலம் மிகவும் ரமணியமான இடம் என்று கண்டு குல்சனாபாத் என்றே அழைத்திருக் கிறார். நாசிக் நகரத்தில் நுழைந்து அந்நகரையும் அங்குள்ள கோயில்களையும் சுற்றிப் பார்க்கு முன் அங்கு ஒடும் கோதாவரி நதியின் பிரபாவத்தைக் கொஞ்சம் தெரிந்து