பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 கிறது. அம்மண்டபத்தைப் பன்னிரண்டு தூண்கள் தாங்கி திற்கின்றன. அம்மண்டபத்தைச் சுற்றியே 24 தீர்த்தங்கரர் களின் வடிவங்கள் உருவாகி இருக்கின்றன. மகாவீரரது வடிவமும் இரண்டிடத்தில் உருவாகி இருக்கிறது. அம் மண்டபத்தில்தான் இந்திரன் கொலு இருக்கிறான். அவன் காலடியிலே ஐராவதம் படுத்துக் கிடக்கிறது. இந்த இந்திர சபாவே, எல்லோராவில் உள்ள குடைவரைகளில் எல்லாம் கலை அழகு நிரம்பியது என்றும் சிலர் கருதுகின்றனர். இந்திர சபாவை ஒட்டியே இன்னொரு சமணக்குடைவரை அது அளவில் சிறியது. அதையே ஜகந்நாதசபை என் கின்றனர். அங்கும் மகாவீரர், பார்சவநாதர் முதலியோர் உருவாகி இருக்கின்றனர். எல்லாம் கம்பீரமான வடிவத்தில். எல்லோராவில் உள்ள அதிமுக்கியமான குடைவரை களுக்கு எல்லாம் உங்களை அழைத்துச் சென்றுவிட்டேன். இவைகளை பார்த்துவிட்டு வெளியேவந்த போது இமயத் தின் சிகரத்திலேயே ஏறிநின்றது போல ஒர் உணர்ச்சி. ஆம் சிற்பக்கலையின் சிகரத்திலேயே அல்லவா இவ்வளவு நேரம் நின்றிருக்கிறோம் என்ற பூரண மனத்திருப்தியோடேயே வெளியே வரலாம், வெளியே வந்து காரை எடுத்துக் கொண்டு மேற்குநோக்கி ஒரு மைல் சென்றால் வேறுள் என்னும் கிராமம் வந்து சேரலாம். அங்கு முன்னமேயே நான் குறித்தேனே அந்த குஸ்ருனேஸ்வரர் கோயிலுக்கும் வந்து சேரலாம். அது என்ன குஸ்ருனேஸ்வரர், வாயில் துழையமாட்டேன் என்கிறதே என்கிறீர்களா, குஸ்ருணம் என்றால் மகாராஷ்டிரா பாஷையில் குங்குமம் என்று பொருளாம். அன்று பார்வதி குங்குமத்தையே பிடித்து வைத்து அதனையே விங்கமாக்கி பூசை செய்திருக்கிறாள். அதனால் அங்கு கோயில் கொண்டுள்ள மூர்த்தி குஸ்ருனேஸ் வரர் என்று பெயர் பெற்றிருக்கிறார். பெயருக்கேற்ப அங்கு குங்கும வடிவத்திலேயே இன்னும் இருக்கிறார். அவர் இந்தியாவில் உள்ள பன்னிரண்டு சோதிர்லிங்கங்களில் ஒருவர் என்று கணக்கிடப்படுகிறார். அவர் மட்டுமே இங்கு