பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 என்று தமிழ்நாட்டின் கலைவாழ் நகரமான காஞ்சி பாராட்டப்படுகிறது. வீரசோழியம் என்னும் இலக்கண நூலில் வரும் மேற்கோள் பாட்டு ஒன்றில், ஆனால் இந்தக் சாஞ்சி எல்லாம் உருவாவதற்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே ஒரு அரியகலைச் சின்னத்தைத் தன்னகத்தே கொண்டு விளங்கியிருக்கிறது. சாஞ்சி. பெளத்தர்கள் பற்றற்றவர்களாக வாழ்ந்தாலும் கலை வளர்ப்பதில் யார்க்கும் பின்னடையவில்லை. கலைச் சின்னங்கள் பலவற்றை நாடு முழுவதும் பரப்பி வைத்திருக் கிறார்கள். அவைகளில் காலத்தால் முற்பட்ட சின்னங் களைத் தாங்கி நிற்கிற இடம்தான் சாஞ்சி. அங்குதான் அசோகர் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே அமைத்த, கலைச்சின்னமான பெருந்து பியும் அதை ஒட்டிய மற்ற சின்னங்களும் இருக்கின்றன. அவற்றைக் காணவே இன்று: நாம் சாஞ்சிக்குச் செல்கின்றோம். சாஞ்சி செல்ல நாம் சென்னையிலிருந்து டில்லி செல்லும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரசில் ஏறி போப்பால் ஜங்ஷனில் இறங்கி விட வேண்டும். அங்கிருந்து பினாய் செல்லும் பாசஞ்சர் வண்டியில் ஏறினால் போப்பாலிலிருந்து இருபத்தி எட்டு மைல் தூரத்தில் உள்ள சாஞ்சி என்னும் ஸ்டேஷனிலேயே இறங்கலாம். ஸ்டேஷனுக்கு பக்கத்திலேயே உள்ள டுரிஸ்ட் ஹோமிலேயே போய்த் தங்கலாம். தக்க வசதி உடையவர் கள் என்றால் மத்திய பிரதேசத்தின் தலைநகரான போப்பாலில் இறங்கி அங்கிருந்து டாக்சி கார் பிடித்துக் கொண்டு சாஞ்சி போய் முன்சொன்ன டுரிஸ்ட் ஹோமி லேயே போய்த் தங்கலாம். அங்கிருந்து அரை மைல் தூரத்திலேதான், சாஞ்சி ஸ்தூபம் இருக்கும் குன்றிருக்கிறது. டாக்சியில் சென்றிருந்தால் மலை மேலேயே செல்லலாம். நல்ல பாதைபோட்டு வைத்திருக்கிறார்கள். இல்லை ரயிலில் சென்றிருந்தால் கால்கடுக்க படிகள் பல ஏறி நடந்துதான் ஆக வேண்டும். - - சாஞ்சி புத்தரது வாழ்க்கையோடு நேரடியாகத் தொடர்புடைய தலம் அன்று. இங்குள்ள பிரம்மாண்ட