பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. போர்பந்தர் கீர்த்திமந்திர் போர்பந்தர் கீர்த்திமந்திர் 'பூலோகத்தில் மனிதனுடைய சரித்திரத்தில் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால் அவனுடைய லெளகீக சித்திகள் அல்ல, அவன் கட்டிவைத்த, உடைத்துப் போட்ட ஏகாதிபதியங்கள் அல்ல. சத்தியத்தையும் தர்மத்தையும் தேடிக்கொண்டு யுகத்திற்கு யுகம் அவனுடைய ஆத்மா வளர்ச்சியடைந்து வந்து இருக்கிறதே அதுதான் மிகப் பெரிய விஷயம். இந்த ஆத்ம வளர்ச்சிக்காகப் பாடுபடு கின்றவர்கள் மானிட சமுதாயத்தின் ஞான இதிகாசத்தில் நிரந்தர ஸ்தானம் பெற்று வருகிறார்கள். கால தேவதை