பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310 கின்றன. மகாத்மா காந்தி அவரது சுய சரிதையில் போர் :பந்தரைப் பற்றி அதிகம் எழுதவில்லை. சுதாமபுரி என்று அழைக்கப்படும் போர்பந்தரில் 1869-ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் தேதி நான் பிறந்தேன், குழந்தைப் பருவத்தில் நான் போர்பந்தரி லேயே இருந்தேன். அங்கே என்னைப் பள்ளிக்கூடத்தில் வைத்தது நினைவு இருக்கிறது. கொஞ்சம் சிரமத்துடன் தான் பெருக்கல் வாய்ப்பாட்டை நோட்டில் போட்டேன். மற்றச் சிறுவர்களுடன் சேர்ந்து கொண்டு எங்கள் உபாத்தி யாயரை ஏளனம் செய்தேன், என்பதைத் தவிர அந்த நாட் களைக் குறித்து வேறு எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லை, என்று மட்டுமே அவர் எழுதியிருக்கிறார். இதற்கு மேலே அவர் எழுதாதற்கு காரணம் ஏழு வயது நிரம்பு முன்னே அவர் தன் தந்தையார் வேலைபார்த்து வந்த ராஜ்கோட் டிற்குச் சென்று விட்டதுதான், அங்குதான் அவர் பள்ளி யில் சேர்ந்து ஒழுங்காகக் கல்விகற்க ஆரம்பித்திருக்கிறார். காந்திஜியின் ஜனன பூமியையும், அதை ஒட்டிய கீர்த்திமந்திரையும் பார்த்தபின் அங்கு பார்க்க வேண்டியது அதிகம் இல்லைதான். கீர்த்திமந்திருக்கு கிழக்கே ஒரு மைல் தூரத்தில் சங்கர்மந்திர், கீதாமந்திர், திருமால் மந்திர் என்னும் கோயில்கள் இருக்கின்றன. இவைகளில் சிறப்பானது கீதாமந்திர்தான், அக்கோயிலின் சுவர்களில் பகவத்கீதை முழுவதும் தெளிவாக எழுதி வைக்கப்பட்டி ருக்கிறது. மகாத்மா காந்தி மிகவும் பாராட்டிப் படித்த தும், அவர் வாழ்வைச் செம்மைப்படுத்தியதும் பகவத்கீதை என்ற நூல்தானே! ஆனால் அவர் அந்த நிலை மூலத்தில்’ படிக்கவில்லை. பாரிஸ்டர் பரிட்சைக்கு இங்கிலாந்து சென் றிருந்த போதுதான் அவர் முதல் முதலில் எட்வின் அர்னால்டின் மொழி பெயர்ப்பு மூலம் கீதையைப் படித் திருக்கிறார். கீதையில் இரண்டாவது அத்தியாயத்தில் காணும் சில சுலோகங்கள் அவர் உள்ளத்தைச் செம்மை