பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 டைரக்டர் ஒரு தமிழர். அன்போடு அளவளாவி ஆராய்ச்சி விவரங்களை எல்லாம் விவரிக்கிறார். ரத்த அழுத்தத்திற்கு பெரிதும் உதவும் தமிழ் மூலிகை சர்ப்பகந்தி அங்கு பயிராக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் பார்த்துவிட்டுத் திரும்பும் போது ஒரு கட்டிடத்தின் முகப்பிலே தேஜோ மயமான ஒரு சிற்பவடிவம் நின்றது. அது ஒரு மகா ராஜாவினுடைய சிலை. கிட்ட போய்ப் பார்த்தால் அது தான் ரஞ்சித் சிங்ஜியின் சிலை என்று அறிந்தேன். ஆம் ரஞ்சித்சிங்தான் கிரிக்கெட் விளையாட்டில் பெரிய புவி என்று புகழபெற்றவர் ஆயிற்றே. அந்த விளையாட்டு வீரருக்கும் அஞ்சலி செலுத்திவிட்டு மேலும் நடந்தேன். கலை வாழ்நகரம் என்று காஞ்சியைச் சொல்வார்கள். ஜாம் நகரைப் பார்த்தபின் அப்படி காஞ்சியைச் சொல்வது வெறும் உபசாரமே என்று தான் தோன்றுகிறது எனக்கு,