பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.25 கின்றன. இங்கேயே ரிஷபா குண்டம் என்றும் ஓர் இடம் இருக்கிறது. கோமதியின் துறையிலும் ரிஷபா குண்டலத். திலும் ஸ்நானம் செய்த பின்னரே கோயிலை நோக்கி நடக்க வேண்டும். கோமதி நதியிலிருந்து 56 படிகள் ஏறி வந்தால் கண்ணன் கோயிலை அடையலாம். இங்குள்ள கண்ணனை ரண்சோட்ராய் என்றும் அழைக்கிறார்கள். துவாரகா நாதனான கண்ணனுக்கு அந்தப்பெயர் வந்த காரணம்தான் நாம் தாக்கோரிலேயே தெரிந்து இருக்கிருேம், கோயிலை ஜகத்மந்திர் என்கிறார்கள். இக்கோயில் பளிங்குக் கற். களால் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் முக்கியப்பகுதி ஐந்து மாடங்கள் உடையதாக இருக்கின்றது. துறையி விருந்து ஐந்தாவது மாடம் நூறு அடி உயரத்தில் இருக் கிறது. இதன் மேல் உள்ள டோமை அறுபது தூண்கள் தாங்கி நிற்கின்றன. கோயிலை ஒரு விமானம் அழகு செப் கிறது. விமானத்தின் நீளம் 175-அடி உயரம் இருக்கிறது. அதன் பேரில் ஒரு நீண்ட கழியில் வெள்ளைக் கொடி ஒன்று பறந்து கொண்டிருக்கிறது. கருவறையில் கிருஷ்ண பரமாத்மா நான்கு திருக்கரங்களோடு வெள்ளி மஞ்சத்தின் மீது நின்று கொண்டிருக்கிறார். மேற்கு நோக்கிய கோலம், அவர் மூன்றடி உயரமே உள்ளவர், நல்ல கரிய மேனியர் வடிவம் அழகுடையதாக இல்லை என்றாலும் நிறைய நவரத்னங்களால் அலங்கரித்திருக்கின்றனர். அவருக்கு எதிரே சுமார் ஐம்பதடி துரத்தில் கண்ணனின் தாயான தேவகிக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. கண்ணன் கோயிலுக்கு துவஜஸ்தம்பம் கிடையாது. கண்ணன் திருவடி களில் நாமே துளசியிலை அருச்சிக்கலாம். கட்டணம் கட்டினால் நமக்காகவே ஒரு திருமஞ்சனமும் செய்து வைப்பார்கள். சர்வாலங்கார பூஜிதனான கண்ணனுக்கு தினசரி பதினோரு தடவை நைவேத்தியத்துடன் பூஐை. நடக்கிறது. முக்கியமான நைவேத்தியம் வெண்ணெய் தான். நாம் தாம் அறிவோமே. கோகுலத்தில் கண்ணன்