பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 அங்கு சென்று அதன்பின் படகுகளில் சென்று பேட்டி துவாரகா என்னும் தீவிற்குச் செல்ல வேண்டும். செல்லும் வழியில் கோபி தபஸ் என்னும் கோயில்குளம், தீர்த்த கட்டம் வேறே இருக்கிறது. இங்கு கோபிநாதருடைய கோயிலும் மகா பிரபுஜியின் கூடமும், சாட்சி கோபால னுடைய கோயிலும் இருக்கின்றன. இங்கு கிடைக்கும் மண் சந்தனம் போலவே இருக்கிறது. இந்த சந்தனத்தை எடுத்து நெற்றியிலும், மார்பிலும் அணிந்து கொண்டே பேட்டிதுவாரகை செல்ல்லாம். பேட்டி துவாரகை என்றால், தீவாயிருக்கும் துவாரகை என்றுதான் அர்த்தம். இங்கு செல்ல ஸ்டீம் லாஞ்சுகளும் சாதாரண படகுகளும் இருக்கின்றன. துவாரகையை தலைநகராக வைத்துக்கொண்டு கண்ணன் அரசாண்ட போது தானும் தன் குடும்பமும் தங்க இந்தத் தீவைத்தான் வைத்துக் கொண்டிருந்தான் என்பர். அதற்கேற்ப அங்கே கிருஷ்ணனின் வீடு, ருக்மணி வீடு, சத்தியபாமையின் அந்தப்புரம், ராதைவீடு என்று தனித்தனிப் பகுதிகள் இருக்கின்றன. அங்கங்கே வசித்தவர்கள் சிலைகளையும் பிற்காலத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கி வந்திருக் கிறார்கள், பூசைகளும் ஒழுங்காய் நடக்கின்றன. எல்லா வற்றிலும் பெரிய வீடு ராதையின் வீடுதான். அதனையே ராதா ராணி வீடு என்று கூறுகின்றனர். இந்தப் பேட்டி துவாரகையிலே சங்கோதார் தீர்த்தம், ஹனுமான் வேண்டி, கல்பகவிருகrம், ராமசபோக்கா மந்திர் முதலியன பார்க்கத் தகுந்தவை. இவற்றையெல்லாம் விட தமிழர்களாகிய நமக் கெல்லாம் துவாரகை, ஆழ்வார்களால் மங்களா சாஸனம் செய்யப்பட்ட திருப்பதிகளில் ஒன்று என்பதே மகிழ்ச்சிக் குரிய விஷயமாகும். பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகிய நால்வரும் துவாரகா நாதனைப் பாடியிருக்கின்றனர். இவர்கள்