பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

359 என்றுமே கிரிதரனை அன்றி வேறிங்கு ஏதுமொரு துணை அறியேன் குன்றுயர்ந்த கோமானே வணங்கும் தெய்வம், குலப்பெருமை குடிப்பெருமை எல்லாம் விட்டேன் . நன்று தரு திருக்கூட்டம் காடிச் சார்ந்தேன் நாண் இழந்தேன் எவரையும் நான் மதிக்க மாட்டேன் துன்று கண்ணிர் விட்டன் பு கொடி வளர்த்தேன் சுகமென்னும் கனியை அது தந்ததம்மா. என்ற மீராவின் பாடல்தான் அவளது மனப் பக்குவத்தை எவ்வளவு சிறப்பாகக் காட்டுகிறது. சித்துனர் சென்றபோது மீரா வணங்கிய கோபாலன் முன்பு இப்பாடலைப் பாடியே திரும்பலாம்தானே.