பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362 மேம்பட்டிருந்தது என்றும், அகநகர் புறநகர் என்று இரண்டு பிரிவாக இந்நகர் இருந்ததென்றும் இந் நகர மக்கள் முருகக் கடவுளை வழிபட்டார்கள் என்றும் பெருங் கதை கூறுகிறது. ஆனால் இன்றோ தெருக்கள் எல்லாம் அசுத்தமாயும், வீடுகள் எல்லாம் பொலிவிழந்துமே காணப்படுகின்றன. நாம் இங்கு வந்தது தெருக்களையும் வீடுகளையும் மக்களையும் கர்ண்பதற்கல்லவே. முத்தி தரும் நகரங்கள் எழில் அவந்தியும் ஒன்று, என்று படித்திருக்கிறோமே. ஆதலால் இங்குள்ள கோயில்களைக் காண அல்லவா வந்திருக்கிறோம். ஆகவே, காரை நேரே மேற்கு நோக்கிச் செலுத்தி, உஜ்ஜயினி மகாகாலர் கோயில் வாயிலுக்கே செல்லலாம். விக்கிரமாதித்தன் கதையில் விக்ரமாதித் தனுக்கு அருள் புரிந்தவள் ஒரு மகாகாளி என்று படித்திருக் கிறோம். அத்துடன் எங்கள் திருநெல்வேலியில் உச்சினி மாகாளி என்னும் காளி கோயில் ஒன்றும் எங்கள் தெருவை அடுத்து இருக்கிறது. ஆதலால் உஜ்ஜயினியின் பிரதான தெய்வம் காளி என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு சென்று பார்த்தால், அந்நகரின் பிரதான தெய்வம் மகா காலேஸ்வரர்தான் என்று காண்போம். ஆகவே நாம் முதலில் அம்மகாகாலர் கோயிலுக்கே செல்லலாம். கோயில் விஸ்தாரமான வெளிப் பிரகாரத் துடன் அமைந்த பெரிய கோயில் தான். கோயிலின் பிரதான வாயில் வடக்கு நோக்கி இருக்கிறது. அதில் நுழைந்ததும் ஒரு பெரிய வராத்தா இருக்கிறது. அங்கு தான் ஆதிக்கோயிலின் சிதைந்த சிற்பங்கள் பலவும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் கல்லில் செதுக்கிய சிற்பங்கள் கையிழந்தும் காலிழந்தும், தலை யிழந்தும் கிடக்கும். இடையிடையே ஒன்றிரண்டு சிதை யாமலும், முழு வடிவுடனும் இருக்கும். இச் சிற்ப வடிவங்கள் சிறந்த அழகு வாய்ந்தவை என்று கூற இயலாது. ஆதலால் விறு விறு என்று சுற்றிப் பார்த்துவிட்டு