பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 கோயிலுக்குத்தென்புறம் ஒரு குளம் இருக்கிறது. நல்ல படிக் கட்டுக்கள் எல்லாம் கட்டி வைத்திருந்தாலும், தண்ணிர் சுத்தமாகயில்லை. பாசிபிடித்தே கிடக்கிறது. இதனையே கோடி தீர்த்தக் குளம் என்கின்றனர். இந்தத் தீர்த்த மகிமையைப்பற்றியும் ஒரு கதை. இராவணனை வதம் முடித்து அயோத்தி திரும்பிய ராமனுக்கு பட்டாபிஷேக ஏற் பாடுகள் நடக்கின்றன. சப்த தீர்த்தங்களிலிருந்தும் தீர்த்தம் கொண்டுவரும் பணியை அனுமானிடம் ஒப்புவிக்கிறார்கள். அவந்தியில் உள்ள சிப்ரா நதியின் தீர்த்தத்தை எடுக்க வரு கிறான். அந்த ஆற்றங்கரையில் காகபுஷண்டரிஷி என்பவர் தவம் செய்து கொண்டிருக்கிறார். அனுமானது வரவால் திமையால் இங் குள்ள தீர்த்தத்தை எடுத்துச் செல்ல இயலவில்லை அனுமா னுக்கு. பின்னர் அனுமான் அந்த ரிஷியைப் பிரார்த்திக்க, அந்த முனிவரும் அனுமன் எடுத்துவந்திருக்கும் மற்றத்தீர்த் தங்களில் கொஞ்சம் கொஞ்சம் அங்கே விடும்படி சொல் கிறார். அப்படியே செய்கிறான் அனுமனும். அதன்பின் தான் அங்குள்ள தீர்த்தத்தை எடுத்துச் செல்ல முடிந்திருக் கிறது, அவனுக்கு. ராமபட்டாபிஷேகத்திற்கு என்று எடுத்துச் சென்ற அந்த சப்த தீர்த்தங்களும் இங்கே ஒருங்குசேர்ந்த காரணத்தால் இ ந் த தீர்த்த கட்டம் பிரசித்தி அடைந்திருக்கிறது. சரும வியாதி உள்ளவர்கள் இதில் மூழ்கி எழுந்தால் அவர்களது வியாதி தீர்கிறது. என்கின்றனர். இக்குளத்தின் மேலக்கோடியில் ராமர் சீதாலட்சுமண சமேதராக எழுந்தருளியிருக்கிறார். அவ. ருக்குப் பின்னால் அவந்திகா தேவியும் எழுந்தருளியிருக் கிறாள். இக்குளத்தைச் சுற்றி தருமசாலை கட்டிவைத் திருக்கிறார்கள். இக்குளத்திற்கு படிக்கட்டுகள், தரும சாலை எல்லாம் கட்டியவர் மாதவராவ் விநாயக்ராவ். பீஷ்வா என்பவர்கள். மகாகாலரது பழைய கோயிலைக் கட்டியவர் ராமச்சந்திர பீஷ்வா என்று சரித்திர ஏடுகள் பேசுகின்றன.