பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 பொன்கொண்டு இழைத்த மணியைக் கொண்டுபொதிந்த மின்கொண்டு அமைத்த வெயிலைக்கொண்டு சமைத்த என்கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத வன்கொண்டல் விட்டு மதிமுட்டுவன மாடம் என்றே அவரால் பாடமுடிந்திருக்கிறது. ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் என்னும் வண்ணநகரம் சென்று, அ ங் கு ஸ் ள மாடமாளிகைகள், அரண்மனைகளைப் பார்த்தோமானால் இந்த இலங்கை வர்ணனைதான் ஞாபகத்திற்கு வரும். உண்மையிலேயே பெரிய ராஜாக்கள் தங்கியிருந்த இடம் ராஜஸ்தான். அன்று 22 ராஜாக்கள் தனித்தனி ராஜ்யங்களாக அமைத்து ஆண்டு வந்திருக் இறார்கள். அந்த சமஸ்தானங்கள் அனைத்தையும் ஒன் றாய்ச் சேர்த்து ராஜஸ்தான் என்று ஒரு பெரிய மாநிலத் தையே உருவாக்கிய பெருமை சர்தார் பட்டேலையே சாரும். அந்த மாநிலத்தின் தலைநகர்தான் ஜெய்ப்பூர், தலைநகராயிருக்கத் தகுதியுடைய பெரிய நகரம் அது. அங்குள்ள அகலம் அகலமான வீடுகளையும் வானுற ஓங்கி வளர்ந்திருக்கும் சிவப்பு வர்ணக்கட்டிடங்களையும் பார்த் தால், அது இந்தியாவின் எழில் வண்ணங்களை எல்லாம் திரட்டி அமைத்த ஒரு சிறந்த வண்ண நகராகவே தோன்றும். அந்த வண்ணநகரத்தைக் காணவே இன்று செல்கின்றோம் நாம் ஜெய்ப்பூருக்கு. - ஜெய்ப்பூர் செல்ல அகமதாபாத் டில்லி ரயிலில் செல்ல வேண்டும். அப்படிச் சென்றால் ஜெய்ப்பூர் ஸ்டேஷ னிலேயே இறங்கலாம். இல்லை, சென்னையிலிருந்து செல் பவர்கள் என்றால், ஆக்ரா போய் அங்கிருந்து ரயில் மாறியும் செல்லலாம். காரிலேயே வடநாட்டு யாத்திரை