பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

395 பரைக் கதை உண்டு. பல்வகை படைஎடுப்புக்கெல்லாம் ஆளாகி நின்ற டில்லி மொகலாய மன்னர்கள் காலத்தில் தான் சீரும் சிறப்பும் பெற்றிருக்கிறது. பின்னர் வெள்ளைக் காரர் ஆட்சியில், நாட்டின் தலைநகராம் கல்கத்தாவிற்கு மாற்றப்பட்டதன் காரணமாக டில்லி பொலிவிழந்திருக் கிறது. திரும்பவும் 1911-ல் தலைநகராம் டில்லிக்கு மாற்றப்பட்ட பின்பே புது டில்லி உருவாக ஆரம் பித்திருக்கிறது. இன்றோ புது டில்லிதான் நமது நாட்டின் பிரதான ஆட்சி பீடமாக விளங்குகிறது. ஆதலால் முதல் நாள் நாம் தங்கியிருந்த கரோல்பாக்கி லிருந்து தென் கிழக்காக வந்து புது டில்லிப் பகுதிகளைப் பார்க்கலாம். விறு விறு என்று பெரிய ராஜ வீதிகளைக் கடந்து, நம் நாட்டின் தலை விதியை நிர்ணயிக்கும் பார்லிமெண்ட் கட்டிடத்திற்கே முதலில் போகலாம். 1921-ல் இக் கட்டிடம் கட்ட அஸ்திவாரம் இடப்பட்டு 1927-ல் தான் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. வட்ட வடிவமான பிரம்மாண்டமான கட்டிடம் அது. அதன் சுற்றளவு அரை மைல் தூரம், கட்டிடத்தின் மத்திய டோமின் குறுக்களவு நூறு அடி, லண்டன் செயின்ட் பால் சர்ச்சின் டோம் போன்று பெரியது. இதன் மாடியைத் தாங்கி நிற்பவை 144-துரண்கள். ஒவ்வொன்றும் 27 அடி உயரம் ஓங்கி நின்று கட்டிடத்திற்கு அழகு தருகிறது. அக் கட்டிடத்தில் காரியாலயங்களுக்கு என ஒதுக்கிய இடம் போக மக்கள் சபையும் ராஜ்யசபையும் கூடுவதற்காக மூன்று பெரிய ஹால்கள் உண்டு. உள்ளேயுள்ள முற்றத்தில் விக்கிரமாதித்தன் சிலை ஒன்றும் நிறுவப்பட்டிருக்கும். மக்கள் சபை நடக்கும்போது அனுமதி பெற்றே உள்ளே நுழையவேண்டும். கட்டிடத்தை சுற்றிப்பார்ப்பதற்கு அதிகாரிகள் அனுமதி பெறவேண்டும். பார்லிமெண்ட் கட்டிடத்திலிருந்து தெற்கு நோக்கி நடந்தால் கூப்பிடு தூரத்திலேயே அரசாங்கக் காரியாலயங் கள் இருக்கின்றன. இவை இரண்டும் பெரிய கட்டிடங்களாக